டாம் எண்டு 'C3 ஷைன்' வேரியன்டின் விலையை அறிவித்து சிட்ரன்!
செய்தி முன்னோட்டம்
C3-யின் டாப் எண்டான C3 ஷைன் வேரியன்டின் விலையை அறிவித்தது பிரெஞ்சு கார் தயாரிப்பு நிறுவனமான சிட்ரன்.
தங்களது மாஸ் மார்க்கெட் ஹேட்ச்பேக் காரான சிட்ரன் C3-யை கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவில் வெளியிட்டது சிட்ரன்.
வெளியீட்டின் போது ஃபீல் மற்றும் லைவ் ஆகிய இரண்டு வேரியன்ட்களை மட்டுமே அந்நிறுவனம் வெளியிட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம், C3 மாடலின் புதிய ஷைன் வேரியன்டை வெளியிட்டது சிட்ரன்.
இந்த வேரியன்டின் தொடக்க நிலை மாடலின் விலையை மட்டும் வெளியீட்டின் போது அறிவித்திருந்த அந்நிறுவனம், அதன் டாப் எண்டின் வேரியன்டின் விலையை அறிவிக்கவில்லை.
தற்போது டாப் எண்டின் விலையையும் அறிவித்திருக்கிறது சிட்ரன் நிறுவனம்.
சிட்ரன்
என்ன விலை?
1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் கொண்ட தொடக்க நிலை ஷைன் வேரியன்டை ரூ.7.60 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிட்டிருந்தது அந்நிறுவனம்.
தற்போது 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்டின் கொண்ட டாப் எண்டு ஷைன் வேரியன்டிற்கு ரூ.8.80 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையை நிர்ணயம் செய்திருக்கிறது சிட்ரன்.
இந்த வெளியீடுகளைத் தொடர்ந்து தற்போது ஃபீல், லைன் மற்றும் ஷைன் ஆகிய மூன்று வேரியன்ட்களும் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனுடன் கிடைக்கின்றன.
தொடக்க நிலை வேரியன்டான ஃபீல் மற்றும் டாப் எண்டு வேரியன்டான ஷைன் ஆகிய இரண்டு வேரியன்ட்கள் மட்டும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனுடன் கிடைக்கின்றன.