புக் செய்த ட்ரெயின் டிக்கெட்டின் தேதியை மாற்ற வேண்டுமா? விவரம் உள்ளே
சிலரால், ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்த தேதியில் பயணம் செய்ய முடியாமல் போகலாம். பயணத் தேதியில் திடீரென்று மாற்றம் ஏற்படலாம். அப்போது, ஏற்கனவே பதிவு செய்த டிக்கெட்-ஐ கேன்சல் செய்து விட்டு, மீண்டும் புக்கிங் செய்யும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இப்போது அந்த கவலை வேண்டாம். புக் செய்யப்பட்ட டிக்கெட்-இன் பயண தேதியை மட்டும் மாற்ற வேண்டும் என்றால், நீங்கள் அருகில் இருக்கும் ரயில்வே புக்கிங் கவுண்டர்-க்கு சென்று, விண்ணப்பத்தை பூர்த்தி செய்தால், உங்களது ரயில்வே டிக்கெட் தேதி மட்டும் மாற்றி தரப்படும். பிரயாண தேதியை மாற்ற, புக் செய்த பிரயாண நேரத்தில் இருந்து 48 மணி நேரம் முன்பு வரை அனுமதி உண்டு. அப்படி மாற்றப்படும் டிக்கெட்டிற்கு தனியாக கட்டணம் எதுவும் செலுத்தத் தேவை இல்லை.
பதிவு செய்த ரயில் டிக்கெட்டில் மாற்றங்கள் செய்யலாம்
எனினும், தேதி மாற்றப்படும் போது, உங்களுக்கு confirmed டிக்கெட் கிடைக்குமா என உறுதியாக சொல்ல முடியாது. சில நேரங்களில் அது வைட்டிங் லிஸ்ட்டிலோ, RAC -யாகவோ அமைய வாய்ப்புள்ளது. நீங்கள் விருப்பப்பட்டால், உங்கள் புக்கிங் வகுப்பையும் மாற்றி அமைத்து கொள்ளலாம். மாற்றி அமைக்கப்படும் வகுப்பிற்கு மட்டும், கூடுதல் கட்டணம் செலுத்த நேரிடும். இந்த தேதி மாற்றும் வசதி, ஆன்லைன் டிக்கெட், ஆஃப்லைன் டிக்கெட் இரண்டிலுமே உள்ளது. எனினும், தேதியை மாற்றுவது, டிக்கெட் கவுண்டர்-ல் மட்டுமே செய்ய முடியும். ஆன்லைனில் செய்ய முடியாது.