டிரைவிங் லைசென்ஸ் விதிகளில் மாற்றம்: 40-60 வயதுடையவர்களுக்குச் சலுகை மற்றும் 'Penalty point' முறை அறிமுகம்
செய்தி முன்னோட்டம்
மத்திய அரசு Driving Licence வழங்கும் மற்றும் புதுப்பிக்கும் நடைமுறைகளில் புரட்சிகரமான மாற்றங்களை அறிமுகப்படுத்த உள்ளது. தற்போதைய விதிமுறைப்படி, 40 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் உரிமத்தை புதுப்பிக்க மருத்துவ தகுதி சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், இனி இந்த வயதினருக்கு மருத்துவச் சான்றிதழ் தேவையில்லை என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதேசமயம், 60 வயதை கடந்தவர்களுக்கு இந்த விதிமுறை தொடரும். சாலை பாதுகாப்பை மேம்படுத்த 'பெனால்டி பாயிண்ட்' (Penalty Points) என்ற புதிய முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
Penalty பாயிண்ட்
இது எப்படி செயல்படும்?
Penalty Points படி, போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் ஓட்டுநர்களின் உரிமத்தில் அபராத புள்ளிகள் சேர்க்கப்படும். இந்த புள்ளிகள் ஒரு குறிப்பிட்ட எல்லையைத் தாண்டினால், ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படும். மேலும், இந்த அபராத புள்ளிகள் வாகன காப்பீட்டுடன் (Insurance) இணைக்கப்படும். இதனால் அதிக விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் அதிக காப்பீட்டு தொகையை செலுத்த வேண்டியிருக்கும்.
உரிமம்
உரிமம் மாற்றுவதும் எளிது
வாகன உரிமையாளர் மாற்றத்தை பொறுத்தவரை, இனி ஆதார் அடிப்படையில் முழுமையாக ஆன்லைன் மூலமே செய்துகொள்ளலாம். இது போக்குவரத்து அலுவலகங்களில் (RTO) காத்திருப்பதைத் தவிர்க்க உதவும். மேலும், அனைத்து ஓட்டுநர் உரிமதாரர்களும் தங்களின் மொபைல் எண் மற்றும் முகவரியை டிஜிட்டல் முறையில் புதுப்பிப்பதும் கட்டாயமாக்கப்பட உள்ளது. ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெற்ற மாநில போக்குவரத்து அமைச்சர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட இந்த மாற்றங்கள், வரும் மார்ச் மாதம் முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.