LOADING...
2026இல் 1 லட்சம் ரூபாய்க்குள் வாங்க சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்: டாப் 5 மாடல்களின் விலை மற்றும் சிறப்பம்சங்கள்
2026இல் 1 லட்சம் ரூபாய்க்குள் வாங்க சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்

2026இல் 1 லட்சம் ரூபாய்க்குள் வாங்க சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்: டாப் 5 மாடல்களின் விலை மற்றும் சிறப்பம்சங்கள்

எழுதியவர் Sekar Chinnappan
Jul 05, 2026
03:07 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் எலக்ட்ரிக் இரு சக்கர வாகன சந்தை, குறிப்பாக 1 லட்சம் ரூபாய்க்கு உட்பட்ட பட்ஜெட் பிரிவு நடப்பு 2026 ஆம் ஆண்டில் மிக அபார வளர்ச்சியை எட்டியுள்ளது. ஆரம்ப காலத்தில் புதிய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த இந்த விலைப் பிரிவில், தற்பொழுது பஜாஜ், டிவிஎஸ், ஓலா மற்றும் ஹீரோ போன்ற முன்னணி நிறுவனங்கள் தங்களது நம்பகமான மாடல்களைக் களம் இறக்கியுள்ளன. இதில் டாப் 5 மாடல்களை இங்கு விரிவாகப் பார்க்கலாம்.

ஓலா, ஆம்பியர்

ஓலா எல்1 எக்ஸ் மற்றும் ஆம்பியர் மேக்னஸ் கிராண்ட்

இந்த பட்ஜெட் பட்டியலில் முதலாவதாக இருக்கும் ஓலா எல்1 எக்ஸ் மாடலின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை 69,999 ரூபாயாகும். இதில் உள்ள 2 கிலோவாட் பேட்டரி மூலம் 108 கிமீ மைலேஜும், 101 கிமீ அதிகபட்ச வேகமும் கிடைப்பதால் தினசரி 60 கிமீ தூரம் பயணிப்பவர்களுக்கு இது ஏற்றது. இதற்கு அடுத்தபடியாக உள்ள ஆம்பியர் மேக்னஸ் கிராண்ட் மாடலின் விலை 89,999 ரூபாயாகும். எளிமையான கம்யூட்டர் டிசைன் கொண்ட இந்த ஸ்கூட்டர் 95 கிமீ மைலேஜ் தருவதுடன், இதன் எல்எஃப்பி பேட்டரிக்கு 5 ஆண்டுகள் அல்லது 75,000 கிமீ வரை வாரண்டியும் வழங்கப்படுகிறது.

பஜாஜ்

பஜாஜ் சேத்தக் C2501 இன் மெட்டல் பாடி பலம்

பாரம்பரியமான தோற்றத்தை விரும்புபவர்களுக்காக பஜாஜ் நிறுவனம் தனது சேத்தக் C2501 மாடலை 91,504 ரூபாய் எக்ஸ்-ஷோரூம் விலையில் வழங்குகிறது. இந்த விலைப் பிரிவில் பொதுவாகப் பிளாஸ்டிக் பேனல்களே வழங்கப்படும் நிலையில், முழுமையான மெட்டல் பாடி அமைப்பைக் கொண்டுள்ள ஒரே ஸ்கூட்டர் இதுவே ஆகும். இதில் உள்ள 2.5 கிலோவாட் என்எம்சி பேட்டரி மூலம் 113 கிமீ மைலேஜ் கிடைப்பதுடன், இதனுடன் வழங்கப்படும் 750 வாட் சார்ஜர் மூலம் வெறும் 2.5 மணி நேரத்திற்குள் 80 சதவீதம் வரை மிக வேகமாக சார்ஜ் செய்து கொள்ள முடியும்.

Advertisement

டிவிஎஸ்

டிவிஎஸ் ஆர்பிட்டர் வழங்கும் அசாத்திய மைலேஜ்

கடந்த ஆண்டு டிவிஎஸ் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆர்பிட்டர் V2 மாடலானது 1,05,000 ரூபாய் விலையில் (பேஸ் வேரியண்ட் 88,250 ரூபாயிலிருந்து தொடங்குகிறது) இந்த பட்டியலில் ஒரு முக்கியத் தேர்வாகும். இதில் உள்ள 3.1 கிலோவாட் பேட்டரி மூலம் இந்த ஒட்டுமொத்த பட்டியலிலேயே அதிகபட்சமாக 158 கிமீ மைலேஜ் கிடைக்கிறது. இந்தியாவின் மிக நீண்ட தூரப் பயணங்களுக்கு ஏற்ற இந்த இ-ஸ்கூட்டரின் மிகப்பெரிய பலம் என்னவென்றால், நாடு முழுவதும் உள்ள டிவிஎஸ் நிறுவனத்தின் 2,800 க்கும் மேற்பட்ட ஆஃப்டர்-சேல்ஸ் சர்வீஸ் நெட்வொர்க் ஆகும்.

Advertisement

ஹீரோ

ஹீரோ விடா VX2 கோ மாடலின் மாற்றக்கூடிய பேட்டரி

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விடா VX2 கோ மாடலானது 84,800 ரூபாய் எக்ஸ்-ஷோரூம் விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்கூட்டரின் மிக முக்கியச் சிறப்பம்சம் என்னவென்றால், இதிலுள்ள பேட்டரியைக் கழற்றி நாம் வீட்டிற்குள்ளேயே எடுத்துச் சென்று எளிதாக சார்ஜ் செய்து கொள்ள முடியும் என்பதாகும். குறிப்பாக அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் உள்ள 3.4 கிலோவாட் பேட்டரி பேக் மூலம் 142 கிமீ மைலேஜும், 12 இன்ச் அலாய் வீல்களுடன் கூடிய சிபிஎஸ் பிரேக்கிங் பாதுகாப்பும் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement