Page Loader
54 நாட்கள், 13500 கிமீ பயணம் - சாதித்த Orxa மான்டிஸ் எலக்ட்ரிக் பைக்!
Orxa நிறுவனத்தின் எலக்ட்ரிக் பைக் 20 மாநிலங்களில் 54 நாட்கள் பயணத்தை மேற்கொண்டது

54 நாட்கள், 13500 கிமீ பயணம் - சாதித்த Orxa மான்டிஸ் எலக்ட்ரிக் பைக்!

எழுதியவர் Siranjeevi
Apr 08, 2023
08:09 pm

செய்தி முன்னோட்டம்

மின்சார வாகனங்கள் வளர்ச்சியை எட்டியுள்ள நிலையில், கடந்த ஆண்டு பெங்களூரில் இருந்து Orxa எனர்ஜிஸ் நிறுவனம் 6 ஸ்டார்டப்களுடன் எலக்ட்ரிக் பாரத்மாலா என்ற சவாரிக்கு சென்றது. இதனிடையே Orxa Mantis பைக் ஆனது சாதனை படைக்க அந்நிறுவனம் முடிவு செய்தது. அதன்படி, 14,000 கிலோமீட்டர் பயணத்தை மேற்கொள்ள 'ஸ்டார்ட்அப்ன்ரெவ்' என்ற கூட்டமைப்பை உருவாக்கி 6 ஸ்டார்ட் அப்களை இணைத்தனர். அதைத்தொடர்ந்து, 54 நாட்களில் 13,510 கிமீ பயணம் செய்து நாடு முழுவதும் 'எலக்ட்ரிக் பாரத்மாலா' என்று பெயர் சூட்டப்பட்டது. 20 மாநிலங்களில், எலக்ட்ரிக் பைக் ஆனது பிப்ரவரி 4, 2022 அன்று பெங்களூரில் இருந்து தொடங்கியது.

எலக்ட்ரிக் வாகனங்கள்

எலக்ட்ரிக் பைக்கில் 54 நாட்கள் பயணம் மேற்கொண்ட மான்டிஸ் - எப்போது கிடைக்கும்?

பல மலை பாதைகள், பாலைவனங்கள் என அபரிதமான பயணத்தை மேற்கொண்டு இறுதியாக 29 மார்ச் 2022 அன்று பெங்களூருவை அடைந்தது. மாண்டிஸ் பைக் ஆரம்ப காலத்தில் இதனை ஸ்ட்ரீட் பைக்காக வடிவமைக்கப்பட்டது. இவை 200 கிமீ பயணம் மேற்கொள்ளும். சராசரியாக இந்த பைக் 70 இல் இருந்து 75 கிமீ வேகத்தில் செல்லும். இதற்காக 68 சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பைக் குறித்து Orxa Energies இன் இணை நிறுவனர் ரஞ்சிதா தெரிவிக்கையில், உற்பத்தி இந்த பைக் அதிகரிக்கப்படும். பாரத்மாலாவின் போது, ​​எங்களின் முன்மாதிரிகள் மூலம் சுமார் 27,000 கிமீ சோதனை செய்து, நாம் மேம்படுத்த வேண்டிய விஷயங்களைக் கண்டறிகிறோம். சாலைக்கு தகுதியான சான்றிதழை முடித்தவுடன், நாங்கள் இ-பைக்கை அறிமுகப்படுத்துவோம் எனக்கூறியுள்ளார்.