ஆஃப்-ரோடு போகணுமா? இல்ல சிட்டி டிரைவிங்கா? 4x4 மற்றும் AWD கார்களுக்கு இடையே இருக்கும் ரகசிய வித்தியாசம்
செய்தி முன்னோட்டம்
இன்றைய கார் சந்தையில் பல கார்கள் எஸ்யூவி என்று அழைக்கப்பட்டாலும், அவை அனைத்தும் கரடுமுரடான சாலைகளுக்கு ஏற்றவை அல்ல. மாருதி கிராண்ட் விட்டாரா, மஹிந்திரா XUV 7XO போன்ற கார்களில் உள்ள AWD (All-Wheel Drive) சிஸ்டம் தினசரி சாலை பயன்பாட்டிற்கு உதவும். ஆனால், மஹிந்திரா தார் ராக்ஸ், ஸ்கார்பியோ N அல்லது மாருதி ஜிம்னி போன்ற உண்மையான 4x4 எஸ்யூவிகள் முற்றிலும் மாறுபட்ட ஆற்றலைக் கொண்டவையாகும்.
நன்மைகள்
4x4 எஸ்யூவிகளின் 5 முக்கிய நன்மைகள்
லோ-ரேஞ்ச் கியர்: உண்மையான 4x4 கார்களில் லோ-ரேஞ்ச் டிரான்ஸ்பர் கேஸ் இருக்கும். இது குறைந்த வேகத்தில் அதிகப்படியான இழுவிசையை வழங்கும். மலைப்பாங்கான சாலைகள், கற்கள் நிறைந்த பாதைகள் மற்றும் ஆழமான பள்ளங்களில் கார் சிக்காமல் ஊர்ந்து செல்ல இதுவே முக்கியக் காரணம். AWD கார்களில் இந்த வசதி இருக்காது. லேடர்-பிரேம் சேஸி: பெரும்பாலான 4x4 கார்கள் லேடர்-பிரேம் கட்டமைப்பில் உருவாக்கப்படுகின்றன. இது அதிக எடையைத் தாங்கும் திறன் கொண்டது மற்றும் கரடுமுரடான பாதைகளில் கார் நெளியாமல் இருக்க உதவுகிறது. சாதாரண கிராஸ்ஓவர் கார்கள் மோனோகாக் முறையில் செய்யப்படுவதால், அவை ஆஃப்-ரோடு சவால்களைத் தாங்குவது கடினம்.
செயல்திறன்
அதிக திறன்
அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ்: 4x4 எஸ்யூவிகள் தரையிலிருந்து உயரமாக இருக்கும். இதனால் பாறைகள் அல்லது மேடு பள்ளங்களில் செல்லும்போது காரின் அடிப்பகுதி அடிபடாது. மேலும் இதன் அப்ரோச் மற்றும் டிபார்ச்சர் கோணங்கள் சிறப்பானதாக இருப்பதால், செங்குத்தான சரிவுகளில் ஏறுவது எளிது. கடினமான சூழலில் செயல் திறன்: மணல், சேறு அல்லது அதிகப்படியான பனி உள்ள இடங்களில் 4x4 சிஸ்டம் நான்கு சக்கரங்களுக்கும் சமமான ஆற்றலை வழங்கி காரை முன்னோக்கி தள்ளும். AWD சிஸ்டம் பொதுவாக வழுக்கும் சாலைகளில் நிலைத்தன்மையை வழங்க மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிக பாரம் இழுக்கும் திறன்: வலுவான என்ஜின் மற்றும் கட்டமைப்பால், 4x4 எஸ்யூவிகளால் மற்ற வாகனங்களை அல்லது அதிக எடையுள்ள டிரெய்லர்களை எளிதாக இழுத்துச் செல்ல முடியும்.
கவனம்
நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்
நிச்சயமாக 4x4 கார்கள் அதிக பலம் வாய்ந்தவை, ஆனால் அவை கிராஸ்ஓவர் கார்களை விட எடை அதிகம் கொண்டவை. இதனால் மைலேஜ் சற்று குறைவாகவே இருக்கும். நீங்கள் பெரும்பாலும் நகரத்திற்குள்ளேயே கார் ஓட்டுபவர் என்றால் AWD கிராஸ்ஓவர் உங்களுக்கு வசதியாக இருக்கும். ஆனால், நீங்கள் அடிக்கடி ஆஃப்-ரோடு பயணம் செல்பவர் அல்லது மலை கிராமங்களில் வசிப்பவர் என்றால் 4x4 எஸ்யூவி தான் உங்கள் சிறந்த தேர்வாக இருக்கும்.