ஆஸ்திரிய பைக் தயாரிப்பு நிறுவனமான பிரிக்ஸ்டன் இந்திய சந்தையில் நுழைந்துள்ளது
செய்தி முன்னோட்டம்
ஆஸ்திரிய பைக் உற்பத்தியாளரான பிரிக்ஸ்டன் மோட்டார்சைக்கிள்ஸ், இந்திய சந்தையில் நுழைவதற்கான திட்டத்தை வெளியிட்டுள்ளது.
பிரிக்ஸ்டன் நிறுவனம் KAW Veloce Motors Pvt லிமிடெட் (KVMPL)உடன் கூட்டு சேர்ந்துள்ளது.
இது இந்தியாவில் ஒரு உற்பத்தி ஆலையை நிறுவ உள்ளது.
இந்த கூட்டமைப்பின் விளைவாக இந்திய பார்வையாளர்களுக்காக வடிவமைக்கப்பட்ட பல்வேறு மோட்டார் சைக்கிள்கள் KAW Veloce மோட்டார்ஸ் தயாரித்து விநியோகிக்கப்படும்.
பிரிக்ஸ்டன் இந்தியா முழுவதும் ஒரு விரிவான டீலர் நெட்வொர்க்கை உருவாக்க உத்திகளை வகுத்து வருகிறது.2024 ஆம் ஆண்டின் இறுதியில், அவர்கள் 15 டீலர்ஷிப்களைத் திறந்து, 2025 ஆம் ஆண்டளவில் இந்த எண்ணிக்கையை 50 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளனர்.
தயாரிப்பு வெளியீடு
2024ஆம் ஆண்டுக்குள் நான்கு மோட்டார் சைக்கிள்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டம்
2024 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் நான்கு மோட்டார் சைக்கிள்களை அறிமுகப்படுத்தும் லட்சியத் திட்டத்தை பிரிக்ஸ்டன் கொண்டுள்ளது.
இந்த வாகனங்கள் தற்போது பிரிக்ஸ்டனின் ஆஸ்திரிய வடிவமைப்பு மையத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
மேலும் அவை மகாராஷ்டிராவின் கோலாப்பூரில் வரவிருக்கும் உற்பத்தி ஆலையில் தயாரிக்கப்படும்.
KVMPL உடன் இணைந்து, பிரிக்ஸ்டன் இந்தியாவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை நிறுவவும் திட்டமிட்டுள்ளது.
தென்கிழக்கு ஆசிய மற்றும் ஆப்பிரிக்க சந்தைகளுக்கு இந்தியாவை மூலோபாய ஏற்றுமதி மையமாக மாற்றுவதே இதன் நோக்கம்.
இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பு வெளியீடு சாகச மோட்டார்சைக்கிளாக இருக்கும், இது 2024ஆம் ஆண்டு பண்டிகைக் காலத்தில் உலகளவில் அறிமுகமாகும்