
ரூ.4.1 லட்சம் விலையில் இந்தியாவில் வெளியானது 'ஏப்ரிலியா RS 457' பைக்
செய்தி முன்னோட்டம்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் தங்களுடைய புதிய RS 457 ப்ரீமியம் பைக்கை அறிமுகப்படுத்தியிருந்த ஏப்ரிலியா நிறுவனம், இந்திய மோட்டோஜிபி போட்டியின் போது அந்த பைக்கை காட்சியும்படுத்தியிருந்தது.
இதனைத் தொடர்ந்து தற்போது அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் அந்த பைக்கை வெளியிட்டிருக்கிறது ஏப்ரிலியா.
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் பாராமதி மாவட்டத்தில் உள்ள தங்களது தொழிற்சாலையிலேயே இந்தப் புதிய RS 457 பைக்கை உற்பத்தி செய்கிறது ஏப்ரிலியா. மேலும், இந்தியாவில் இருந்தே பிற நாடுகளுக்கு இந்த பைக் மாடலை ஏற்றுமதி செய்யவும் அந்நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.
இந்த பைக்குக்கான முன்பதிவு வரும் டிசம்பர் 15ம் தேதி முதலும், டெலிவரி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதலும் தொடங்கப்படவிருக்கிறது.
ஏப்ரிலியா
ஏப்ரிலியா RS 457: இன்ஜின் மற்றும் விலை
இந்தப் புதிய RS 457 பைக்கில் 48hp பவரை வெளிப்படுத்தக்கூடிய, 457சிசி, லிக்விட் கூல்டு, பேரலல்-ட்வின் இன்ஜினைப் பயன்படுத்தியிருக்கிறது ஏப்ரிலியா நிறுவனம்.
எக்கோ, ரெய்ன் மற்றும் ஸ்போர்ட் ஆகிய மூன்று ரைடிங் மோடுகளைக் கொண்டிருக்கும் இந்த பைக்கில் அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் வகையிலான ட்ராக்ஷன் கண்ட்ரோல் வசதிகளும் அளிக்கப்பட்டுள்ளன.
6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கும் இந்த ப்ரீமியம் RS 457 பைக்கில், ஸ்லிப்-அண்டு அசிஸ்ட் கிளட்ச் மற்றும் க்விக்-ஷிப்டன் ஆகிய வசதிகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
இந்தியாவில் ரூ.4.1 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியாகியிருக்கும் இந்த பைக்கானது, கேடிஎம் RC 390 மற்றும் கவாஸாகி நின்ஜா 400 ஆகிய மாடல்களுக்குப் போட்டியாக களமிறக்கப்பட்டிருக்கிறது.