திடீரென டெஸ்லா காரின் விலை குறைப்பு - எந்த மாடலுக்கு?
டெஸ்லா நிறுவனம் அமெரிக்க சந்தையில் மின்சார வாகனங்கள் விலையை குறைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகின் பிரபலமான காராக கருதப்படும் டெஸ்லா கார் மக்களிடையே அமோக வரவேற்பு உள்ளது. இந்த காரின் உற்பத்தியால் எலான் மஸ்க் பல கோடிரூபாய் வருமானம் ஈட்டியுள்ளார். இந்த நிலையில், டெஸ்லா கார்களின் விலை குறைக்கபட்டுள்ளதாக கூறப்படுகிறது. டெஸ்லாவின் மாடல் எஸ் $89,990 (சுமார் ரூ. 73.6 லட்சம்) இல் தொடங்குகிறது. அதே நேரத்தில் மாடல் X $99,990 (தோராயமாக ரூ. 81.8 லட்சம்) ஆரம்ப விலையைக் கொண்டுள்ளது. ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த மாதம் இரண்டு கார்களின் தொடக்க விலைகள் முறையே 5.3% மற்றும் 9.1% குறைந்துள்ளன.
டெஸ்லாவின் S and Model X மாடல் விலையை குறைத்துள்ளது - எவ்வளவு?
எலக்ட்ரிக் வாகன விற்பனையில் புதுமை படைத்து வரும் டெஸ்லா கார்கள், அமெரிக்காவில் அதிக அளவில் விற்பனையாகி வருகிறது. எனவே, சந்தையில் நல்ல விற்பனையில் உள்ள தன்னுடைய கார்களை திடீரென டெஸ்லா நிறுவனம் விலை குறைக்க என்ன காரணம் என தெரியவில்லை. சமீபத்திய விலை மாற்றங்கள், ராய்ட்டர்ஸ் அறிக்கையின்படி , ஆண்டின் தொடக்கத்தில் இருந்து டெஸ்லாவின் ஐந்தாவது சரிசெய்தலைக் குறிக்கிறது. இருப்பினும், திடீர் விலை குறைப்பால் கார் ப்ரியர்கள் குஷியடைந்துள்ளனர். இந்த விலை குறைப்பு டெஸ்லா விற்பனையை இன்னும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என கூறப்படுகிறது.