Page Loader
KTM 390 Adventure 2023 வெளியீடு! புதிய அம்சங்கள் என்னென்ன?
2023 ktm 390 adventure இந்தியாவில் வெளியீடு

KTM 390 Adventure 2023 வெளியீடு! புதிய அம்சங்கள் என்னென்ன?

எழுதியவர் Siranjeevi
Feb 06, 2023
02:13 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில், அட்வென்சர் பைக் செக்மென்டில் KTM Adventure 390 ஒரு சிறந்த பைக் ஆகும். மற்ற பிராண்ட்களை விட இந்த பைக் கொடிக்கட்டி பறக்கிறது. இந்த பைக்கின் 2023 மாடல் இப்போது புதிய வசதிகளுடன் வெளியாகியுள்ளது. இந்த பைக் அதன் முந்தைய 2022 KTM 390 adventure பைக் போலவே உள்ளது. ஆரஞ்சு நிறத்தில் வெளியாகியுள்ளது. இதில், LED ஹெட் லைட், டைல் லைட், LED இண்டிகேட்டர் வசதி, TFT ஸ்க்ரீன் உள்ள ஸ்பீடோமீட்டர் வசதி, ஹாண்டில் மவுண்ட் கண்ட்ரோல், சார்ஜிங் போன்ற வசதிகள் உள்ளன. அதேப்போல் 373.2cc சிங்கள் சிலிண்டர் லீகுய்ட் கூல்டு என்ஜின் இடம்பெற்றுள்ளது. இதன் பவர் 44BHP மற்றும் 37NM டார்க் ஆகும்.

கேடிஎம்

2023 ktm 390 adventure சிறப்பு அம்சங்கள் - விலை விபரங்கள்

இதில் 6 ஸ்பீட் மேனுவல் கியர் பாக்ஸ் உள்ளது. இதில் டூயல் சேனல் Cornering ABS, Traction Control வசதி இருப்பதால் சிறந்த பிரேக்கிங் கிடைக்கும். முன்பக்கம் 320mm டிஸ்க் மற்றும் பின்பக்கம் 230mm டிஸ்க் பிரேக் வசதி இடம்பெற்றுள்ளது. பைக்கில், 14.5 லிட்டர் பியூயல் டேங்க் வசதி உள்ளது. இதனால் நாம் தொடர்ந்து 400 கிலோமீட்டர் தூரம் பயணம் செல்லமுடியும். மேலும், இதில் டெக்னாலஜி அம்சங்களாக KTM கனெக்ட் வசதி இருப்பதால் நமது ஸ்மார்ட்போனுடன் இணைத்து நமது ரைடிங் விவரங்களை தெரிந்துகொள்ளலாம். இன்னும் சில வாரங்களில் இந்த பைக் இந்தியாவில் அறிமுகமாகும். தற்போது விற்கப்படும் KTM 390 Adventure 3.37 லட்சம் ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) விலையில் கிடைக்கிறது.