LOADING...
டிரம்பின் போர்டு ஆஃப் பீஸ் கூட்டத்தில் பங்கேற்ற இந்தியாவின் ஐஎஃப்எஸ் அதிகாரி; யார் இந்த நம்கியா சி கம்பா?
டிரம்பின் போர்டு ஆஃப் பீஸ் கூட்டத்தில் பங்கேற்ற இந்தியாவின் ஐஎஃப்எஸ் அதிகாரி நம்கியா சி கம்பாவின் பின்னணி

டிரம்பின் போர்டு ஆஃப் பீஸ் கூட்டத்தில் பங்கேற்ற இந்தியாவின் ஐஎஃப்எஸ் அதிகாரி; யார் இந்த நம்கியா சி கம்பா?

எழுதியவர் Sekar Chinnappan
Feb 20, 2026
03:09 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், காசா மறுசீரமைப்பு மற்றும் உலகளாவிய அமைதியை நோக்கமாகக் கொண்டு போர்டு ஆஃப் பீஸ் என்ற புதிய அமைப்பை உருவாக்கியுள்ளார். பிப்ரவரி 19, 2026 அன்று வாஷிங்டனில் நடைபெற்ற இதன் முதல் கூட்டத்தில், இந்தியா ஒரு பார்வையாளர் நாடாகப் பங்கேற்றது. இக்கூட்டத்தில் இந்தியாவின் சார்பாக நம்கியா சி கம்பா கலந்துகொண்டார். ஐநா சபைக்கு மாற்றாக டிரம்ப் இந்த அமைப்பைப் பார்ப்பதால், இதில் இந்தியா பங்கேற்றது சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது.

நம்கியா சி கம்பா

நம்கியா சி கம்பாவின் பின்னணி

நம்கியா சி கம்பா 2000 ஆம் ஆண்டு பேட்ச் சேர்ந்த இந்திய வெளியுறவுத் துறை (ஐஎஃப்எஸ்) அதிகாரி ஆவார். தற்போது இவர் அமெரிக்காவிற்கான இந்தியத் தூதரகத்தில் தற்காலிகத் தூதராக மற்றும் துணைத் தூதராகப் பணியாற்றி வருகிறார். ஒரு முழுநேரத் தூதர் இல்லாத நேரத்தில், இந்திய-அமெரிக்க உறவுகளை முன்னெடுத்துச் செல்லும் மிக முக்கியமான பொறுப்பை இவர் கவனித்து வருகிறார்.

சாதனைகள்

இவரது கடந்த கால சாதனைகள்

இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான ராஜதந்திர அனுபவம் கொண்ட நம்கியா கம்பா, இதற்கு முன்பு பல முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார்: கென்யா மற்றும் சோமாலியா: அமெரிக்கா வருவதற்கு முன்பு கென்யாவிற்கான இந்திய உயர் ஆணையராகவும், சோமாலியாவிற்கான இந்தியத் தூதராகவும் பணியாற்றினார். நேபாளம் மற்றும் சீனா: நேபாளத்தில் துணைத் தூதராகவும், சீனாவில் 2002-2006 மற்றும் 2013-2016 என இரண்டு முறை தூதரகப் பணிகளிலும் இருந்துள்ளார். பிரதமர் அலுவலகம்: 2016 முதல் 2018 வரை இந்தியப் பிரதமர் அலுவலகத்தில் முக்கியப் பொறுப்பில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. ஐநா சபை: 2009 முதல் 2013 வரை நியூயார்க்கில் உள்ள ஐநாவிற்கான இந்தியத் தூதரகத்தில் பணியாற்றியபோது, ஐநாவின் வரவு செலவு ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Advertisement

ராஜதந்திர நகர்வு

இந்தியாவின் ராஜதந்திர நகர்வு

ஜனவரி 22 அன்று டாவோஸில் ட்ரம்ப் இந்த அமைப்பை அறிவித்தபோது இந்தியா அதில் பங்கேற்கவில்லை. ஆனால், தற்போது பிப்ரவரி 19 கூட்டத்தில் நம்கியா கம்பா மூலம் பங்கேற்றிருப்பது, டிரம்ப் நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட இந்தியா தயாராக இருப்பதைக் காட்டுகிறது. சர்வதேச விவகாரங்களில் இந்தியாவின் நலன்களைக் காக்க நம்கியா கம்பா போன்ற அனுபவம் வாய்ந்த அதிகாரிகள் முக்கியப் பங்காற்றி வருகின்றனர்.

Advertisement