
ரஷ்ய அதிபர் புதினின் பெற்றோர் கல்லறை மீது ஒருவர் சிறுநீர் கழிக்கும் வீடியோ வைரல்
செய்தி முன்னோட்டம்
ரஷ்யாவில் அதிபர் தேர்தல் நடந்துவரும் நிலையில், ரஷ்ய அதிபர் புதினின் பெற்றோர் கல்லறை மீது ஒருவர் சிறுநீர் கழிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள செராஃபிமோவ்ஸ்கி கல்லறை தோட்டத்தில் ரஷ்ய அதிபர் புதினின் பெற்றோர் கல்லறை அமைந்துள்ளது.
இந்நிலையில், அந்த கல்லறை மீது யாரோ ஒரு அடையாளம் தெரியாத நபர் சிறுநீர் கழிப்பது போன்ற ஒரு வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோவின் உண்மைகத்தன்மை இன்னும் சரிபார்க்கப்படவில்லை என்றாலும், இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதின் 1952இல் விளாடிமிர் ஸ்நர் மற்றும் மரியா என்பவர்களுக்கு மகனாக பிறந்தார்.
இரண்டாம் உலகப் போரில் சண்டையிட்டு மீண்டு வந்தர்வகளில் அவரது தந்தையும் ஒருவர் ஆவார்.
ரஷ்யா
ரஷ்ய அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவாரா புதின்
ரஷ்ய அதிபர் தேர்தல் நடந்து கொண்டிருக்கும் நிலையில், அதிபர் விளாடிமிர் புதினை அவமதிக்கும் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
தற்போது நடந்துவரும் அதிபர் தேர்தலில் அவர் கண்டிப்பாக வெற்றி பெற்று இன்னும் 6 ஆண்டுகளுக்கு ஆட்சியில் இருப்பார் என்று நம்பப்படுகிறது.
அவர் இந்த தேர்தலில் வெற்றி பெற்றால், தேர்தல் வெற்றி ஜோசப் ஸ்டாலினுக்குப் பிறகு மிக நீண்ட காலம் ரஷ்யாவை ஆட்சி செய்த ஆட்சியாளர் என்ற பெருமை அவருக்கு கிடைக்கும்.
வரும் ஞாயிற்றுக்கிழமை வாக்குப்பதிவு முடிந்தவுடன் முடிவுகள் அறிவிக்கப்பட்டாலும், மே மாதம் வரை புதிய தலைவர் பதவியேற்கமாட்டார்.
ட்விட்டர் அஞ்சல்
வைரலாகி வரும் வீடியோ
An unknown person urinated on the grave of Putin's parents at the Serafimovsky cemetery in St. Petersburg. pic.twitter.com/zF63kbLUB7
— Insider Corner (@insiderscorner) March 15, 2024