ரஷ்ய எண்ணெயை வாங்க இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் அளித்தது அமெரிக்கா; ஈரான் போரால் மாறிய புவிசார் அரசியல்
செய்தி முன்னோட்டம்
வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்கா - ஈரான் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகத்தை உறுதிப்படுத்த இந்தியாவுக்கு ஒரு முக்கிய சலுகையை அமெரிக்கா வழங்கியுள்ளது. கடலில் தேங்கியுள்ள ரஷ்ய கச்சா எண்ணெய் சரக்குகளை இந்திய நிறுவனங்கள் வாங்குவதற்கு 30 நாட்கள் தற்காலிக விலக்கு அளிக்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்க நிதித்துறைச் செயலர் ஸ்காட் பெசென்ட் இது குறித்துக் கூறுகையில், "உலகச் சந்தையில் எண்ணெய் வரத்து தடையின்றி இருப்பதை உறுதி செய்யவே இந்தியாவுக்கு இந்த 30 நாள் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது ஏற்கனவே கடலில் பயணித்துக் கொண்டிருக்கும் சரக்குகளுக்கு மட்டுமே பொருந்தும். இதனால் ரஷ்யாவுக்கு பெரிய அளவில் நிதி ஆதாயம் கிடைத்துவிடாது," என்று விளக்கமளித்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
President Trump’s energy agenda has resulted in oil and gas production reaching the highest levels ever recorded.
— Treasury Secretary Scott Bessent (@SecScottBessent) March 6, 2026
To enable oil to keep flowing into the global market, the Treasury Department is issuing a temporary 30-day waiver to allow Indian refiners to purchase Russian oil.…
எரிசக்தி
இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு
ஈரான் போரால் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் வருவது பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் நிலைமை சற்று கவலைக்கிடமாக இருந்தது. இந்தியா தனது எண்ணெய் தேவையில் 40 சதவீதத்தை மத்திய கிழக்கு நாடுகளில் இருந்தே பெறுகிறது. தற்போது இந்தியாவிடம் சுமார் 25 நாட்களுக்குத் தேவையான எண்ணெய் இருப்பு மட்டுமே உள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டால், ரஷ்ய எண்ணெய் மட்டுமே இந்தியாவிற்கு உடனடி தீர்வாக அமையும். அமெரிக்காவின் அறிவிப்பை தொடர்ந்து, இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களான IOC, BPCL போன்றவை ரஷ்ய எண்ணெயை வாங்குவதற்கு பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளன. ரிலையன்ஸ் நிறுவனமும் ரஷ்ய கச்சா எண்ணெயை பெற வர்த்தகர்களை அணுகியுள்ளது. சுமார் 2 கோடி பேரல் ரஷ்ய எண்ணெயை வாங்குவதற்கு இந்திய நிறுவனங்கள் ஏற்கனவே ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தகவல்.