8 பேரை ஏற்றி சென்ற அமெரிக்க இராணுவ விமானம் ஜப்பான் அருகே கடலில் விழுந்து நொறுங்கியது
செய்தி முன்னோட்டம்
8 பேரை ஏற்றி சென்ற அமெரிக்க ராணுவ விமானம் ஜப்பானின் யாகுஷிமா தீவு அருகே இன்று கடலில் விழுந்து நொறுங்கியது.
விமானத்தில் இருந்தவர்களுக்கு என்ன ஆனது என்பது உட்பட இந்த சம்பவம் குறித்த கூடுதல் விவரங்கள் எதுவும் இல்லை என்று ஜப்பானின் கடலோரக் காவல்படையின் செய்தித் தொடர்பாளர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.47 மணியளவில் இந்தச் சம்பவம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க இராணுவ விமானம் கடலில் விழுந்தபோது அதன் இடது இயந்திரத்தில் இருந்து தீ பற்றி எரிந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.
டவ்கிளிக்
கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த இதே போன்ற சம்பவம்
ஜப்பானில் உள்ள அமெரிக்கப் படைகளின் செய்தித் தொடர்பாளர், சம்பவம் குறித்த தகவல்களை இன்னும் சேகரித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் அமெரிக்க ஆஸ்ப்ரே இராணுவ விமானம் இருந்தது சர்சைக்குரியது என்று விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
அது ஒரு ஹைப்ரிட் மாடல் இராணுவ விமானம் என்பதால், அது ஜப்பான் கடலில் விபத்துக்குள்ளாக அதிக வாய்ப்பு இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், ஜப்பானும் அமெரிக்காவும் அந்த விமானம் பாதுகாப்பாக தான் இருந்தது என்று கூறியுள்ளன.
இதே போல கடந்த ஆகஸ்ட் மாதம், ஒரு அமெரிக்க ஆஸ்ப்ரே இராணுவ விமானம் ஆஸ்திரேலியாவின் கடற்கரையில் விபத்துக்குள்ளானது. அப்போது 3 அமெரிக்க கடற்படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.