Loading...
அமெரிக்க இடைத்தேர்தல் 2026: இந்திய வம்சாவளி வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்புகள் & தேர்தல் கள நிலவரம்
2026 அமெரிக்க இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்து முடிவுகள் வெளியாகத் தொடங்கியுள்ளன

அமெரிக்க இடைத்தேர்தல் 2026: இந்திய வம்சாவளி வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்புகள் & தேர்தல் கள நிலவரம்

எழுதியவர் Venkatalakshmi V
Nov 04, 2026
09:39 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையின் 435 இடங்கள், செனட் அவையின் 35 இடங்கள் மற்றும் 36 மாநில ஆளுநர் பதவிகளுக்கான 2026 அமெரிக்க இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்து முடிவுகள் வெளியாகத் தொடங்கியுள்ளன. இந்திய நேரப்படி (IST) புதன்கிழமை அதிகாலை 4:30 மணி முதல் வாக்குப்பதிவு மையங்கள் மூடப்பட்டு, முடிவுகளின் கணிப்புகள் வெளியாகத் தொடங்கியுள்ளன. தீவிரப் போட்டி நிலவும் தொகுதிகளின் அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியாக சில நாட்கள் ஆகலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் முன்னணியில் உள்ள முக்கிய இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் தேர்தல் நிலவரம்:

மாநில அளவிலான போட்டிகள்

முக்கிய ஆளுநர் & மாநில அளவிலான போட்டிகள்

டொனால்ட் ட்ரம்ப்பின் ஆதரவு பெற்ற தொழிலதிபரான விவேக் ராமசாமி, ஜனநாயகக் கட்சியின் ஆமி ஆக்டனை எதிர்த்துப் போட்டியிடுகிறார். வெற்றி பெற்றால் ஓஹியோவின் முதல் இந்திய வம்சாவளி ஆளுநர் என்ற வரலாற்றைப் படைப்பார்.

அருணா மில்லர் (ஜனநாயகக் கட்சி -மேரிலேண்ட் துணை ஆளுநர்): மேரிலேண்டின் தற்போதைய துணை ஆளுநரான இவர், வெஸ் மூரின் கூட்டணி வேட்பாளராக மீண்டும் இரண்டாவது முறை போட்டியிடுகிறார்.

சரிதா கோமடிரெட்டி (குடியரசுக் கட்சி - நியூயார்க் அட்டர்னி ஜெனரல்): முன்னாள் ஃபெடரல் வழக்கறிஞரான இவர், ஜனநாயகக் கட்சியின் லெட்டிடியா ஜேம்ஸை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.

ஜோஷ் கவுல் (ஜனநாயகக் கட்சி - விஸ்கான்சின் அட்டர்னி ஜெனரல்): காஷ்மீரி வம்சாவளியைச் சேர்ந்த இவர், எரிக் டோனியை எதிர்த்து மீண்டும் போட்டியிடுகிறார்.

அமெரிக்க பிரதிநிதிகள் சபை

அமெரிக்கப் பிரதிநிதிகள் சபை போட்டிகள்

அமெரிக்க காங்கிரஸில் மிக நீண்ட காலம் எம்பியாக இருக்கும் இந்திய வம்சாவளித் தலைவரான அமி பேரா மீண்டும் போட்டியிடுகிறார்.

வாஷிங்டன் 7-வது தொகுதியில் இரு இந்திய வம்சாவளியினர் நேருக்கு நேர் மோதுகின்றனர். ஜனநாயகக் கட்சியின் பிரமிளா ஜெயபாலை எதிர்த்துக் குடியரசுக் கட்சியின் முன்னாள் ராணுவ வீரர் நிரவ் ஷேத் போட்டியிடுகிறார்.

சிலிக்கான் பள்ளத்தாக்குத் தொகுதியில் ஜனநாயகக் கட்சியின் பிரபல எம்பி ரோ கன்னாவை எதிர்த்துக் குடியரசுக் கட்சியின் ரிதேஷ் டாண்டன் 3-வது முறையாகப் போட்டியிடுகிறார்.

சுகாஸ் சுப்ரமணியம்: வடக்கு விர்ஜினியா தொகுதியில் ஜனநாயகக் கட்சி சார்பில் 2-வது முறை போட்டியிடுகிறார்.

அரினோசாவின் 1-வது தொகுதியில் ஜனநாயகக் கட்சி சார்பில் அமிஷ் ஷா களமிறங்கியுள்ளார்.

ADVERTISEMENT

மாநில சட்டமன்றம்

மாநில சட்டமன்றம் & உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர்கள்

நித்யா ராமன்: லாஸ் ஏஞ்சலஸ் மேயர் தேர்தலின் இறுதிச் சுற்றில் தற்போதைய மேயர் கரேன் பாஸை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.

ரஞ்சீவ் புரி: மிச்சிகன் மாநிலப் பிரதிநிதிகள் சபையின் சிறுபான்மைத் தலைவராக உள்ள இவர், ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றால் அமெரிக்க வரலாற்றின் முதல் இந்திய வம்சாவளி சபாநாயகராக வாய்ப்புள்ளது.

பிரியா சுந்தரேசன்: அரிசோனா மாநிலச் செனட் ஜனநாயகக் கட்சித் தலைவரான இவர் மீண்டும் போட்டியிடுகிறார்.

பூஜா சேத்தி: வெற்றி பெற்றால் டெக்சாஸ் சட்டமன்றத்திற்குத் தேர்வாகும் முதல் இந்து/இந்திய வம்சாவளிப் பெண் என்ற பெருமையைப் பெறுவார்.

அபர்ணா ராஜ்: வார்டு 1 தேர்தலில் வெற்றிப் பாதையில் உள்ளார்.

ADVERTISEMENT