அமெரிக்க ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்திய ஈரான்; பதிலுக்கு ஏவுகணைகளை வீசிய அமெரிக்கா
செய்தி முன்னோட்டம்
மத்திய கிழக்கு பகுதியில் ஏற்கனவே இஸ்ரேல் - ஈரான் இடையே ஏவுகணைப் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தற்போது அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நேரடி ராணுவப் போர் வெடித்துள்ளது. சர்வதேச எரிசக்தி போக்குவரத்தின் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் நீரிணை பகுதியில் பறந்து கொண்டிருந்த அமெரிக்க ராணுவத்தின் 'அபாச்சி' ரக ஹெலிகாப்டர் ஒன்றை ஈரானிய தற்கொலைப்படை ட்ரோன் தாக்கி சுட்டு வீழ்த்தியதை அடுத்து, செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) இரவு அமெரிக்கா ஈரானிய ராணுவ இலக்குகள் மீது அதிரடி வான்வழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
U.S. Central Command (CENTCOM) forces began launching self-defense strikes against Iran at 5 p.m. ET today at the Commander in Chief’s direction, in response to yesterday’s downing of a U.S. Army Apache helicopter. The mission is a proportional response to unjustified Iranian…
— U.S. Central Command (@CENTCOM) June 9, 2026
டொனால்ட் டிரம்ப்
"தகுந்த பதிலடி கொடுக்கப்படும்": டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
அமெரிக்க ஹெலிகாப்டர் வீழ்த்தப்பட்டதை அடுத்து அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹெலிகாப்டரில் இருந்த இரண்டு அமெரிக்க பைலட்டுகளும் எவ்வித காயமுமின்றி உயிர் தப்பியதாகக் குறிப்பிட்டுள்ளார். எனினும், "ஈரானின் இந்த அத்துமீறலுக்கு வாஷிங்டன் சும்மா இருக்காது, தகுந்த பதிலடி கொடுக்கப்படும்" என எச்சரித்தார். இதனைத் தொடர்ந்து, அமெரிக்க மத்திய கட்டளைகம் ஈரானின் அத்துமீறலுக்கு எதிராக தற்காப்பு நடவடிக்கையாக ஹார்முஸ் நீரிணையைச் சுற்றியுள்ள ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ரேடார் தளங்களை குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.
எச்சரிக்கை
"எங்கள் பிராந்தியத்தை விட்டு வெளியேறுங்கள்": ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரிக்கை
அமெரிக்க ஹெலிகாப்டர் வீழ்த்தப்பட்ட சம்பவத்திற்கு நேரடியாகப் பதிலளிக்காத ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, தனது எக்ஸ் (X) தளத்தில் அமெரிக்காவிற்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். "அமெரிக்கா ஏற்கனவே போர்க்களத்தில் பல தோல்விகளைச் சந்தித்துள்ளது. இப்போது மீண்டும் ஈரானின் உறுதிப்பாட்டைச் சோதிக்க நினைக்கிறது. ஈரானியப் படைகள் தங்களின் மீதான எந்தவொரு தாக்குதலையும் அல்லது அச்சுறுத்தலையும் சும்மா விடாது. அதற்குத் 'தீர்க்கமான பதிலடி' கொடுக்கப்படும்". "வளைகுடா பகுதியில் வெளிநாட்டு ராணுவங்கள் பாதுகாப்பாக இருக்க விரும்பினால், அவர்கள் உடனடியாக எங்கள் பிராந்தியத்தை விட்டு வெளியேற வேண்டும். அத்துமீறி நுழையும் அந்நியர்களுக்குப் பாரசீக வளைகுடா வரலாறு என்ன மாதிரியான விதியைத் தந்தது என்பதை அவர்கள் மறந்துவிடக் கூடாது."*
மோதல்
உலக நாடுகளுக்கு எழுந்துள்ள புதிய மிரட்டல்
கடந்த ஏப்ரல் 8 போர்நிறுத்த உடன்படிக்கைக்கு பிறகு அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மிக நேரடியான மற்றும் ஆபத்தான ராணுவ மோதல் இதுவாகும். உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் பெரும் பகுதியைத் தீர்மானிக்கும் ஹோர்முஸ் நீரிணையில் போர் வெடித்துள்ளதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மேலும் தாறுமாறாக உயரும் அபாயமும், வளைகுடா பகுதியில் ஒட்டுமொத்த பாதுகாப்பு சீர்குலையும் சூழலும் உருவாகியுள்ளது.