அமெரிக்கா - ஈரான் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் எப்போது கையெழுத்தாகும்?
செய்தி முன்னோட்டம்
உலகையே உலுக்கி வந்த அமெரிக்கா - ஈரான் இடையேயான பல மாத காலப் போர் மற்றும் மத்திய கிழக்கு பதற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இரு நாடுகளுக்கும் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமையன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தனது 80-வது பிறந்தநாளில் இந்த அறிவிப்பை வெளியிட்ட ட்ரம்ப், ஈரானுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த அமெரிக்கக் கடற்படை முற்றுகை உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டு, ஹார்முஸ் நீரிணை சர்வதேசக் கப்பல் போக்குவரத்திற்காக மீண்டும் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
பிரகடனம்
என்று கையெழுத்தாகிறது அமைதி ஒப்பந்தம்?
தனது ட்ரூத் சோஷியல் சமூக ஊடகத் தளத்தில் பதிவிட்டுள்ள அதிபர் ட்ரம்ப், "ஈரானிய இஸ்லாமியக் குடியரசுடனான ஒப்பந்தம் இப்போது முழுமையடைந்துவிட்டது. அனைவருக்கும் வாழ்த்துகள்! உலகக் கப்பல்களே, உங்கள் இன்ஜின்களைத் தொடங்குங்கள். எண்ணெய் தங்கு தடையின்றிப் பாயட்டும்!" என்று மிகவும் உற்சாகமாகக் குறிப்பிட்டுள்ளார். வரும் ஜூன் 19 (வெள்ளிக்கிழமை) அன்று சுவிட்சர்லாந்தில் இந்த அமைதி ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாகக் கையெழுத்தாக உள்ள நிலையில், அங்குள்ள கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளுக்காக ஹார்முஸ் நீரிணை பகுதி தடையின்றி திறக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
உடனடி அமல்
உடனடி அமலுக்கு வந்த இரு முக்கிய முடிவுகள்
அமெரிக்காவின் இந்த அறிவிப்பை ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சகமும், அந்நாட்டின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலும் (SNSC) உறுதிப்படுத்தியுள்ளன. ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா மொஜ்தபா கமேனியின் வழிகாட்டுதலின்படி இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து ஈரானின் சட்ட மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கான துணை வெளியுறவு அமைச்சர் காசிம் கரீபாபாடி கூறுகையில், முழுமையான ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வந்தாலும், இரு முக்கிய முடிவுகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாகத் தெரிவித்தார். 1. லெபனான் உட்பட அனைத்து முன்னணிகளிலும் நடந்து வரும் போர் உடனடியாகவும் நிரந்தரமாகவும் முடிவுக்குக் கொண்டு வரப்படுகிறது. 2. ஈரான் மீது அமெரிக்கா விதித்திருந்த கடற்படை முற்றுகை உடனடியாக ரத்து செய்யப்படுகிறது.