ஈரானுக்கு தெரியாமல் ரகசிய ஆபரேஷன்: லைட் போடாமல் 22 எண்ணெய் கப்பல்களைக் கடத்திய அமெரிக்கா
செய்தி முன்னோட்டம்
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வாஷிங்டனின் மிக முக்கியமான ரகசிய ராணுவ நடவடிக்கை குறித்த விபரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். கடந்த பிப்ரவரி 28 முதல் ஈரான் நாட்டின் கட்டுப்பாட்டில் மூடப்பட்டிருந்த உத்திசார்ந்த முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாக, ஈரானுக்குத் தெரியாமல் அமெரிக்கா மிகப்பெரிய அளவில் கச்சா எண்ணெய் போக்குவரத்தை நடத்தியுள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
நடவடிக்கை
டிரூத் சோஷியல் தளத்தில் டிரம்ப் பதிவு
தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகமான டிரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டுள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப், கடந்த மாதமே அமெரிக்க ராணுவத்திற்கு இந்த ரகசியப் பணியை மேற்கொள்ள தான் உத்தரவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். எண்ணெய் டாங்கர்கள் மற்றும் பிற வணிகக் கப்பல்களைப் பாதுகாப்பாக ஹார்முஸ் நீரிணை வழியே கடத்துவதே இந்த ரகசிய ஆபரேஷனின் முக்கிய நோக்கமாகும். இந்த ரகசிய கூட்டு முயற்சியின் விளைவாக, இதுவரை 100 மில்லியனுக்கும் அதிகமான கச்சா எண்ணெய் பேரல்கள் ஹார்முஸ் நீரிணையைக் கடந்து சர்வதேச திறந்தவெளி சந்தையைச் சென்றடைந்துள்ளதாக டிரம்ப் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். மேலும், 200-க்கும் மேற்பட்ட வணிகக் கப்பல்கள் எவ்வித பாதிப்புமின்றி இந்த ஆபரேஷன் மூலம் பாதுகாப்பாக இப்பகுதியைக் கடந்துள்ளன.
ரகசிய ஆபரேஷன்
"லைட் போடாமல் கடந்து சென்ற 22 கப்பல்கள்"
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த டொனால்ட் டிரம்ப், இந்த ரகசிய நடவடிக்கையின் சுவாரசியமான விபரங்களைப் பகிர்ந்து கொண்டார். கடந்த சில தினங்களுக்கு முன்பு நள்ளிரவில், விளக்குகள் ஏதுமின்றி சுமார் 22 வணிகக் கப்பல்களை அமெரிக்கப் படைகள் ஹார்முஸ் நீரிணை வழியாக வெளியேற்றியுள்ளன. ஈரானிய ராணுவத்திடம் நவீன ரேடார் வசதிகள் இல்லாததால், தங்களின் மூக்கிற்கு அடியில் இவ்வளவு பெரிய கப்பல் போக்குவரத்து நடந்ததை அவர்களால் கண்டறிய முடியவில்லை என்று டிரம்ப் கேலி செய்துள்ளார். அமெரிக்காவின் இந்த அதிரடி உத்தியால் மட்டுமே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 90 டாலருக்கும் கீழ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இல்லையெனில் அது பேரலுக்கு 200 டாலரைத் தாண்டியிருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
🚨Trump just announced he has successfully moved over 100 million barrels of oil through the Strait of Hormuz!
— Commentary Donald J. Trump Posts From Truth Social (@TrumpDailyPosts) June 10, 2026
The U.S. now has total control
Iran's military is defeated & their economy has collapsed
It’s over for the mullahs
HT @EricLDaugh pic.twitter.com/Tzmyczpyk1