LOADING...
முடிவுக்கு வந்த போரிலும் மூண்ட புதிய சர்ச்சை:அமெரிக்கா - ஈரான் இடையே வெடித்த முரண்பாடுகள்
அமெரிக்கா - ஈரான் இடையே வெடித்த முரண்பாடுகள்

முடிவுக்கு வந்த போரிலும் மூண்ட புதிய சர்ச்சை:அமெரிக்கா - ஈரான் இடையே வெடித்த முரண்பாடுகள்

எழுதியவர் Venkatalakshmi V
Jun 16, 2026
07:57 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகள் தங்கள் 4 மாத காலப் போரை முடிவுக்குக் கொண்டு வந்து 60 நாட்கள் தற்காலிகப் போர்நிறுத்தத்திற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) டிஜிட்டல் முறையில் கையெழுத்திட்டுள்ளதாக அறிவித்துள்ளன. வரும் ஜூன் 19 அன்று சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் இதற்கான அதிகாரப்பூர்வ கையெழுத்து இயக்கம் நடைபெறவுள்ளது. இருப்பினும், இந்த ஒப்பந்தம் குறித்த முழுமையான விவரங்கள் அதிகாரப்பூர்வமாக இன்னும் வெளியிடப்படாத நிலையில், ஒப்பந்தத்தின் முக்கியக் கொள்கைகள் குறித்து வாஷிங்டனும் டெஹ்ரானும் முற்றிலும் மாறுபட்ட மற்றும் முரணான விளக்கங்களை அளித்து வருவது உலக அரங்கில் புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹார்முஸ் நீரிணை

ஹார்முஸ் நீரிணை: சுங்கக் கட்டணமா அல்லது சேவை வரியா?

புளூம்பெர்க் செய்தி நிறுவனத்தின்படி, ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் வணிகக் கப்பல் போக்குவரத்தை ஈரானும் ஓமனும் இணைந்தே ஒழுங்குபடுத்தும் என ஈரான் தரப்பு எதிர்பார்க்கிறது. மேலும், ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாஹி கூறுகையில், "நாங்கள் சுங்கக் கட்டணம் வசூலிக்கப் போவதில்லை; ஆனால் கப்பல்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய கடல்சார் சேவைகளுக்கான கட்டணங்களை ஈரான் வசூலிக்கும்" என்று கூறியுள்ளார். ஆனால், தி நியூயார்க் டைம்ஸ் நாளிதழுக்கு அதிபர் ட்ரம்ப அளித்த பேட்டியில், இந்த ஒப்பந்தத்தின்படி ஹார்முஸ் நீரிணை எப்போதும் "முற்றிலும் சுங்கக் கட்டணம் இல்லாத"பகுதியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

நிதி

ஈரானுக்கான நிதிப் பலன்கள்: ட்ரம்பின் 'ஃபேக் நியூஸ்' சாடல்

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு ஈரானிய உயர் அதிகாரி அளித்த பேட்டியின்படி, இந்த ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்காவால் முடக்கப்பட்டுள்ள ஈரானின் 25 பில்லியன் டாலர் சொத்துக்கள் விடுவிக்கப்படும் என்றும், ஈரானின் உள்கட்டமைப்பு மறுசீரமைப்பு நிதிக்கு அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் நிதியுதவி வழங்கும் என்றும் ஈரானின் மெஹர் நியூஸ் தெரிவித்துள்ளது. ஆனால், ஈரானுக்கு அமெரிக்கா நேரடியாகப் பணம் வழங்குகிறது என்ற தகவலை அதிபர் டொனால்ட் ட்ரம்ப தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் முற்றிலும் மறுத்துள்ளார். "ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க மாட்டேன் என்று ஒப்புக்கொண்டுள்ளது! அதைவிடுத்து அமெரிக்கா ஈரானுக்கு 300 மில்லியன் டாலர் பணம் தருவதாக வெளியாகும் செய்திகள் அனைத்தும் டெமாக்ரட்டுகள் (Dumocrats) பரப்பும் **முற்றிலும் பொய்யான செய்திகள் ஆகும்!" என ட்ரம்ப் சாடியுள்ளார்.

Advertisement

யுரேனியம்

செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பு: "அவசரமில்லை" என்ற ட்ரம்ப்

ஈரானிடம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனிய இருப்பை ஈரானுக்குள்ளேயே வைத்துத் நீர்த்துப்போகச் செய்ய இந்த தற்காலிக ஒப்பந்தம் அனுமதிப்பதாக ஈரானிய அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், இந்த அணுசக்தி விவகாரத்தை இப்போதைக்கு ஒரு பெரிய பொருட்டாக அமெரிக்கா கருதவில்லை. தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நாளிதழுக்கு ட்ரம்ப் அளித்த பேட்டியில், "அணுசக்தி தொடர்பான இறுதி முடிவுகளை நாங்கள் பின்னர் பார்த்துக்கொள்வோம். அடுத்த ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் நாங்கள் அதற்குத் தயாராகும்போது அதைச் செய்வோம், இதில் எந்த அவசரமும் இல்லை. தற்போதைக்கு இது தீங்கற்றது (Harmless)" என்று அலட்சியமாகக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement