வெளியானது அமெரிக்கா - ஈரான் 14 அம்ச ரகசிய ஒப்பந்த வரைவு: ஈரானின் மறுசீரமைப்பிற்கு அமெரிக்கா நிதி?
செய்தி முன்னோட்டம்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பல மாதங்களாக நீடித்து வந்த போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அது தொடர்பான 14 அம்ச ரகசிய ஒப்பந்த வரைவு விவரங்களை ஈரானின் அரசு சார்பு ஊடகமான மெஹர் நியூஸ் வெளியிட்டுள்ளது. இரு நாடுகளும் அதிகாரப்பூர்வமாக இந்த விவரங்களை இன்னும் வெளியிடாத நிலையில், இந்த கசிந்த ஆவண விவரங்கள் உலகளாவிய உளவு மற்றும் பொருளாதார வட்டாரங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.
முக்கிய அம்சம்
முக்கிய ராணுவ மற்றும் இறையாண்மை ஒப்பந்தங்கள்
மெஹர் நியூஸ் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, இந்த 14 அம்ச ஒப்பந்த வரைவின் முதலாவது புள்ளி லெபனான் உட்பட அனைத்துப் போர்முனைகளிலும் ராணுவ நடவடிக்கைகளை உடனடியாகவும் நிரந்தரமாகவும் நிறுத்தக் கோருகிறது. அடுத்தபடியாக, ஈரானின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையிடக் கூடாது என்றும், அதன் இறையாண்மையை மதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஒப்பந்தம் கையெழுத்தான 30 நாட்களுக்குள் அமெரிக்கா தனது கடற்படை முற்றுகையை முழுமையாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும், ஈரானைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள தனது படைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் இந்த வரைவு முன்மொழிகிறது.
முடக்கப்பட்ட சொத்துக்கள்
24 பில்லியன் டாலர் முடக்கப்பட்ட சொத்துக்கள் விடுவிப்பு, மறுசீரமைப்பு நிதி வழங்கப்படும்
பொருளாதார ரீதியாக இந்த ஒப்பந்த வரைவில் ஈரானுக்குப் பெரும் சாதகமான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. "ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு தொடங்கப்படும் 60 நாட்கள் பேச்சுவார்த்தைக் காலத்தில், அமெரிக்காவால் முடக்கப்பட்ட ஈரானின் 24 பில்லியன் டாலர் சொத்துக்கள் படிப்படியாக விடுவிக்கப்படும். இதில் பேச்சுவார்த்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்குவதற்கு முன்பே பாதியளவு(12 பில்லியன் டாலர்) நிதியை அமெரிக்கா ஈரானுக்கு வழங்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது." மேலும், ஈரானிய கச்சா எண்ணெய், பெட்ரோகெமிக்கல் பொருட்கள் மற்றும் அதன் ஏற்றுமதி மீதான தடைகளை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், போரினால் பாதிக்கப்பட்ட ஈரானின் பொருளாதார மறுசீரமைப்பிற்காக அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் இணைந்து 300 பில்லியன் டாலர் மதிப்பிலான மறுசீரமைப்பு நிதியை வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
BREAKING: Iran says the US has agreed to pay $300 billion in reconstruction funds directly to Iran as part of the deal Pakistan announced, alongside the release of $24 billion in frozen funds with $12 billion released before negotiations even start, per Mehr News.
— The Hormuz Letter (@HormuzLetter) June 14, 2026
This directly…
அணு ஆயுதம்
அணு ஆயுதக் கட்டுப்பாடு மற்றும் ஏவுகணை விதிவிலக்கு
இந்த ஒப்பந்த வரைவின் மிக முக்கிய அரசியல் அம்சமாக, எதிர்காலப் பேச்சுவார்த்தைகள் அனைத்தும் ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம், அணுசக்தி நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு ஆகியவற்றில் மட்டுமே கவனம் செலுத்தும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில், ஈரானின் மிக முக்கியப் பாதுகாப்பு அரணான அதன் ஏவுகணைத் திட்டம் மற்றும் பிராந்தியத்தில் உள்ள அதன் நட்பு ஆயுதக் குழுக்களுக்கான ஆதரவு ஆகிய விவகாரங்கள் இந்தப் பேச்சுவார்த்தை வரம்பில் இருந்து முற்றிலும் விலக்கி வைக்கப்பட்டுள்ளன. அமெரிக்க அதிகாரிகள் இந்த அணுசக்தி உள்கட்டமைப்புகளை முழுமையாக முடக்க விரும்புவதாகவும், ஈரான் தனது சொந்த நாட்டிலேயே யுரேனிய இருப்பை நிர்வகிக்கும் உரிமையைக் கோருவதாகவும் இருதரப்பு முரண்பாடுகள் இன்னும் நீடிப்பதால், இறுதி ஒப்பந்தத்தின் முழு வடிவம் வெள்ளிக்கிழமைக்குப் பிறகே தெரியவரும்.