NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / கடைசி நிமிடத்தில் கையெழுத்தானது நிதி மசோதா- அமெரிக்க அரசு முடங்குவது தவிர்ப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    கடைசி நிமிடத்தில் கையெழுத்தானது நிதி மசோதா- அமெரிக்க அரசு முடங்குவது தவிர்ப்பு
    தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள நிதி மசோதாவில் உக்ரைன் நாட்டுக்கு உதவி வழங்குவது குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை

    கடைசி நிமிடத்தில் கையெழுத்தானது நிதி மசோதா- அமெரிக்க அரசு முடங்குவது தவிர்ப்பு

    எழுதியவர் Srinath r
    Oct 01, 2023
    11:00 am

    செய்தி முன்னோட்டம்

    இறுதி நேரத்தில் கையெழுத்தான குறுகிய கால நிதி மசோதாவால் அமெரிக்க அரசு முடங்குவது தற்காலிகமாக தவிர்க்கப்பட்டுள்ளது.

    அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபை மற்றும் பிரதிநிதிகள் சபையில் குறுகிய கால நிதி மசோதா கையெழுத்தானது.

    இந்த மசோதா அமெரிக்க அரசிற்கு நவம்பர் 17 வரை நிதியளிக்க வழிவகை செய்யும். மேலும் இந்த மசோதாவில் உக்கிரேனுக்கு வழங்கப்படும் உதவிகள் குறித்து எதுவும் இடம்பெறவில்லை.

    இந்த மசோதா மூலம் ஆயிரக்கணக்கான அமெரிக்க ஊழியர்களுக்கு ஊதியம் நிறுத்தப்படுவதும், அமெரிக்க அரசுப்பணிகள் முடங்குவதும் தடுக்கப்பட்டுள்ளது.

    2nd card

    அமெரிக்க அரசு ஏன் முடங்குகிறது? 

    அமெரிக்க அரசின் பெரும்பான்மையான துறைகள் அமெரிக்க நாடாளுமன்றத்தின் நிதியுதவி பெற்று இயங்குகின்றன.

    ஒவ்வொரு வருடமும் இந்த துறைகள் தாக்கல் செய்யும் நிதி கோரிக்கைகளை அமெரிக்க நாடாளுமன்றம் நிறைவேற்றிய பின், அமெரிக்க அதிபர் கையெழுத்திட்டு துறைகளுக்கான நிதி விடுவிக்கப்படும்.

    இவ்வாறான நிதி கோரிக்கைகள் அக்டோபர் ஒன்றாம் தேதி தொடங்கும் நிதி ஆண்டுக்கு முன் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்படாத பொழுது அமெரிக்க அரசு முடங்கும்.

    அத்தியாவசியமில்லாத துறைகள் அனைத்தும் செயல்படாது. ராணுவம் முதலிய துறைகள் கூட பாதிக்கப்படும்.

    3rd card

    நிதி மசோதாக்களை நிறைவேற்றுவதில் ஏன் இவ்வளவு சிக்கல்கள்? 

    அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தாக்கல் செய்யப்படும் செலவினங்களில் தோராயமாக 30% கூட ஏற்றுக்கொள்ளப்படாத போது அமெரிக்க அரசு முடங்குகிறது.

    அமெரிக்கா நாடாளுமன்றம் செனட், பிரதிநிதிகள் சபை என இரு சபைகளால் ஆனது

    எதிர்க்கட்சியான குடியரசு கட்சி பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மையுடன் உள்ளது. ஆளும் ஜனநாயக கட்சி செனட் சபையில் குடியரசு கட்சியை விட ஒரு உறுப்பினரை அதிகம் பெற்றுள்ளது.

    இதனால் நிதி மசோதாவை நிறைவேற்ற ஆளும் ஜனநாயக கட்சிக்கு குடியரசு கட்சியின் ஆதரவும் தேவைப்படுகிறது.

    குடியரசு கட்சியினர் உக்கிரேனுக்கு உதவிகள் அளிக்கக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்ததால் மசோதா நிறைவேறுவது தாமதமானது.

    இந்நிலையில் அமெரிக்க அரசு முடங்க சில மணி நேரங்களே இருந்த நிலையில் நாடாளுமன்றம் தற்காலிக நிதி மசோதாவை நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    ஜோ பைடன்
    குடியரசு தலைவர்
    உக்ரைன்

    சமீபத்திய

    ஆபரேஷன் சிந்தூர்: 35-40 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக இந்தியா அறிவிப்பு இந்தியா
    டிவிஎஸ்ஸின் மலிவு விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் அறிமுகம்; முக்கிய அம்சங்கள் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
    அவசர காலத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு மீது அரசுக்கு முழு அதிகாரம்; மத்திய அரசு வரைவு சட்டம் வெளியீடு மத்திய அரசு
    இந்திய ஆயுதப்படைகளின் முப்படை செய்தியாளர் சந்திப்பு தொடங்கியது இந்தியா

    அமெரிக்கா

    போருக்கான ஆயுத உதவி: ரஷ்ய அதிபரை சந்திக்க இருக்கிறார் வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன் ரஷ்யா
    செப்டம்பர் 3ஆம் தேதியை சனாதன தர்ம தினமாக அறிவித்தது அமெரிக்காவின் லூயிஸ்வில்லே சனாதன தர்மம்
    ஸ்பெயின் அதிபருக்கு கோவிட் தொற்று; ஜி 20 மாநாட்டில் கலந்துகொள்ள மாட்டார் என அறிவிப்பு ஜி20 மாநாடு
    யுஎஸ் ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டிக்கு அமெரிக்க இளம் வீராங்கனை தகுதி யுஎஸ் ஓபன்

    ஜோ பைடன்

    திடீரென்று உக்ரைனுக்கு சென்ற அமெரிக்க அதிபர் உக்ரைன் ஜனாதிபதி
    அமெரிக்க வரலாற்றின் இருண்ட காலம் இது: பைடன் அரசாங்கத்தின் மீது டிரம்ப் பாய்ச்சல் உலகம்
    2024 அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார் ஜோ பைடன்: அதிகாரபூர்வ அறிவிப்பு  அமெரிக்கா
    ஜூன் மாதம் அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி: அமெரிக்க அதிபருடன் விருந்து ஏற்பாடு  இந்தியா

    குடியரசு தலைவர்

    சென்னை பல்கலைக்கழக 165வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற இந்திய ஜனாதிபதி மு.க ஸ்டாலின்
    அரசுமுறை பயணத்தினை முடித்துக்கொண்டு டெல்லி புறப்பட்டார் ஜனாதிபதி திரெளபதி முர்மு  தமிழ்நாடு
    முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவு தினம்; தலைவர்கள் அஞ்சலி பிரதமர்
    ஜி 20 மாநாட்டை முன்னிட்டு ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பொதுமக்களுக்கு தடை ஜி20 மாநாடு

    உக்ரைன்

    உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர பிரதமர் மோடியை நம்பி இருக்கிறதா அமெரிக்கா இந்தியா
    உள்ளூர் மோதலை உலகளாவிய மோதலாக மாற்ற அமெரிக்கா முயற்சிக்கிறது: ரஷ்ய அதிபர் உலகம்
    உக்ரைனில் இருக்கும் வீரர்கள் மற்றும் ஆயுதங்களை அமெரிக்கா திரும்பப் பெற வேண்டும்: ரஷ்யா உலகம்
    ஐ.நா. பொதுச் சபையில் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் - உக்ரைன் அரசு ரஷ்யா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025