Loading...
'5 நிமிஷத்துல காலி பண்ணிட்டோம்'; ஈரான் மீது மீண்டும் வான்வழித் தாக்குதல் நடத்தியதாக டிரம்ப் அறிவிப்பு
ஈரான் மீது மீண்டும் வான்வழித் தாக்குதல் நடத்தியதாக டிரம்ப் அறிவிப்பு

'5 நிமிஷத்துல காலி பண்ணிட்டோம்'; ஈரான் மீது மீண்டும் வான்வழித் தாக்குதல் நடத்தியதாக டிரம்ப் அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Nov 07, 2026
09:58 am

செய்தி முன்னோட்டம்

ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்பைக் குறிவைத்து அமெரிக்க ராணுவம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 6) புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். முக்கியமான எண்ணெய் வர்த்தகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் உள்ள கெஷ்ம் தீவில் இரு சக்திவாய்ந்த வெடிப்புகள் நிகழ்ந்ததாக ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஈரானால் புதிதாக அமைக்கப்பட்ட வான் எதிர்ப்பு சாதனத்தை அமெரிக்கப் படைகள் ஐந்து முதல் பதினைந்து நிமிடங்களுக்குள் முற்றிலும் அழித்துவிட்டதாக டிரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இடைத்தேர்தல் பின்னடைவு

இடைத்தேர்தல் பின்னடைவும் ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைகளும்

அமெரிக்க இடைத்தேர்தலில் அதிபர் டிரம்பின் குடியரசுக் கட்சி பின்னடைவை சந்தித்ததைத் தொடர்ந்து ஈரான் மீது நடத்தப்படும் முதல் தாக்குதல் இதுவாகும்.

ஈரான் போரினால் ஏற்பட்ட எரிபொருள் விலை உயர்வு மற்றும் பொருளாதாரப் பாதிப்புகள் காரணமாக அமெரிக்க வாக்காளர்களிடையே டிரம்ப் நிர்வாகத்தின் மீது மாபெரும் அதிருப்தி ஏற்பட்டது.

இந்த சூழலிலும் ஈரானை முற்றிலும் அழிப்பதாக அச்சுறுத்துவதும், போரை முடிவுக்குக் கொண்டுவர விரும்புவதாகக் கூறுவதுமாக அதிபர் டிரம்ப் தொடர்ந்து முரண்பாடான நிலைகளை எடுத்து வருகிறார்.

வெகுமதி அறிவிப்பு

அணுசக்தித் தகவல்களுக்கு அமெரிக்கா அறிவித்த $20 மில்லியன் வெகுமதி

ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்த தகவல்களை வழங்குவோருக்கு $20 மில்லியன் வரை ரொக்கப் பரிசும் புதிய இடத்தில் குடியேறும் வசதியும் வழங்கப்படும் என அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளைப் பிரிவு அறிவித்துள்ளது.

ஈரானின் அணு உலைகள், உபகரணங்கள் மற்றும் விஞ்ஞானிகள் குறித்த தகவல்களை அமெரிக்க வெளியுறவுத்துறையின் ரிவார்ட்ஸ் ஃபார் ஜஸ்டிஸ் திட்டத்தின் மூலம் சேகரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஈரானின் அணுசக்தித் திட்டத்தை முடக்குவதே அமைதிப் பேச்சுவார்த்தையின் மிகக் கடினமான நிபந்தனையாக அமெரிக்காவால் முன்வைக்கப்படுகிறது.

ADVERTISEMENT

கத்தார் பேச்சுவார்த்தை

மத்திய கிழக்கில் தீவிரமடைந்துள்ள கத்தார் மத்தியஸ்த பேச்சுவார்த்தைகள்

போரை முடிவுக்குக் கொண்டுவர கத்தார் அரசு அமெரிக்காவிற்கும் ஈரானிற்கும் இடையே தீவிரத் தூதரக பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகிறது.

கத்தார் எமிர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானியுடன் அதிபர் டிரம்ப் தொலைபேசியில் பேசிப் பிராந்திய பதற்றங்களைக் குறைப்பது குறித்து ஆலோசித்தார்.

மேலும் அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் தனது கத்தார் சகசபாதியுடன் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.

ஈரான் அதிபரும் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ள நிலையில், அமைதி நிலவுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ADVERTISEMENT