LOADING...
போருக்கு நடுவே 'மெகா' ஆயுத பேரம்: 16.5 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அமெரிக்கா -லாபம் யாருக்கு?
16.5 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அமெரிக்கா

போருக்கு நடுவே 'மெகா' ஆயுத பேரம்: 16.5 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அமெரிக்கா -லாபம் யாருக்கு?

எழுதியவர் Venkatalakshmi V
Mar 20, 2026
05:11 pm

செய்தி முன்னோட்டம்

ஈரான் உடனான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தனது வளைகுடா நட்பு நாடுகளின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக 16.5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத விற்பனைக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை மார்ச் 19 அன்று ஒப்புதல் அளித்துள்ளது. இது தவிர, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு (UAE) மட்டும் தனியாக 7 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை வழங்கவும் ட்ரம்ப் நிர்வாகம் பச்சைக்கொடி காட்டியுள்ளது. ஈரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை முறியடிக்க இந்த ஆயுதங்கள் வழங்கப்படுகின்றன.

விவரங்கள்

எந்த நாடு என்ன பெறவுள்ளது?

இந்த ஒப்பந்தத்தால் எந்த நாடு என்ன பெறவுள்ளது என்பதன் விவரங்களை News 18 வெளியிட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் (UAE): ரேடார் அமைப்புகள், ட்ரோன் எதிர்ப்பு கருவிகள் மற்றும் எஃப்-16 போர்விமான தளவாடங்களுக்காக சுமார் 15.4 பில்லியன் டாலர் (7 பில்லியன் கூடுதல் ஒப்பந்தம் உட்பட). குவைத்: அதிவேக இலக்குகளைக் கண்காணிக்கும் ஏவுகணை பாதுகாப்பு ரேடார்களுக்காக 8 பில்லியன் டாலர். ஜோர்டான்: விமானப் படை மற்றும் வெடிமருந்து உதவிகளுக்காக 70.5 மில்லியன் டாலர். அமெரிக்காவின் பாதுகாப்பு பட்ஜெட் 2026-ல் சாதனை அளவாக 1 டிரில்லியன் டாலரை எட்டியுள்ள நிலையில், இந்த ஆயுத ஒப்பந்தங்கள் அமெரிக்கப் பொருளாதாரத்திற்குப் பெரும் ஊக்கத்தை அளித்துள்ளன.

அமெரிக்கா

அமெரிக்காவின் இரட்டை லாபம்

இந்த ஆயுத விற்பனை பிராந்திய பாதுகாப்பிற்கானது என்று அமெரிக்கா கூறினாலும், இதன் பின்னணியில் மிகப்பெரிய பொருளாதார நன்மைகள் இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 1. பாதுகாப்புத் துறை வளர்ச்சி: லாக்ஹீட் மார்ட்டின், ரேதியான் போன்ற அமெரிக்க நிறுவனங்களுக்குப் பல பில்லியன் டாலர் வருவாய் கிடைப்பதோடு, ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகின்றன. 2. எரிசக்தி லாபம்: போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 115 டாலரைத் தாண்டியுள்ளதால், அமெரிக்காவின் டெக்சாஸ், நியூ மெக்ஸிகோ போன்ற மாநிலங்கள் பெரும் வரி வருவாயைப் பெறுகின்றன. 3. நீண்டகால ஆதிக்கம்: அதிநவீன பேட்ரியாட் ஏவுகணைகள் மற்றும் எஃப்-16 விமானங்களை வாங்குவதன் மூலம், வளைகுடா நாடுகள் அடுத்த பல ஆண்டுகளுக்குப் பராமரிப்பு மற்றும் பயிற்சிக்காக அமெரிக்காவையே சார்ந்திருக்க வேண்டியிருக்கும்.

Advertisement