Loading...
ஆபாசத் துறையை சட்டப்பூர்வமாக்கி வரி வசூலிக்கத் திட்டம்; போர் நிதி திரட்ட உக்ரைன் எடுத்த முடிவு
ஆபாசத் துறையை சட்டப்பூர்வமாக்கி வரி வசூலிக்க உக்ரைன் முடிவு

ஆபாசத் துறையை சட்டப்பூர்வமாக்கி வரி வசூலிக்கத் திட்டம்; போர் நிதி திரட்ட உக்ரைன் எடுத்த முடிவு

எழுதியவர் Venkatalakshmi V
Sep 07, 2026
12:13 pm

செய்தி முன்னோட்டம்

ரஷ்யாவுடனான போர் நீடித்து வரும் சூழலில், தனது பாதுகாப்பு நிதி தேவைகளை பூர்த்தி செய்யவும், கூடுதல் வரி வருவாயை பெருக்கவும் நாட்டில் தடை செய்யப்பட்டுள்ள ஆபாச படத் துறையை (Pornography Industry) சட்டப்பூர்வமாக்க உக்ரைன் அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. உக்ரைன் நாடாளுமன்றத்தின் நிதிக் குழுத் தலைவர் யாரோஸ்லாவ் ஜெலெஸ்னியாக் தாக்கல் செய்துள்ள இப்புதிய மசோதா, நாடாளுமன்றத்தில் முதற்கட்ட வாக்கெடுப்பில் தேர்வாகி இரண்டாம் கட்டப் பரிசீலனையில் உள்ளது. இத்துறையைச் சட்டப்பூர்வமாக்கி முறைப்படி வரி விதிப்பதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 2.5 கோடி டாலர் வரை அரசுக்குக் கூடுதல் வருவாய் கிடைக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இத்தொகை நாட்டின் போர் நடவடிக்கைகளுக்காக சுமார் 30,000 ட்ரோன்களை வாங்குவதற்கு போதுமானதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்ட முரண்பாடு

சட்ட முரண்பாடுகளும் லஞ்ச ஒழிப்பும்

தற்போது உக்ரைனில் ஆபாசப் படங்கள் தயாரிப்பது மற்றும் விநியோகிப்பது சட்டவிரோதமாகும்; இதற்காக 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

இருப்பினும் 'OnlyFans' போன்ற தளங்கள் மூலம் ஆயிரக்கணக்கான உக்ரைனியர்கள் மில்லியன் கணக்கில் சம்பாதித்து வருகின்றனர்.

வரித் துறை இந்த வருமானத்திற்கு வரி கோரும் நிலையில், அதைச் செலுத்துபவர்கள் மீது சட்டவிரோதத் தொழில் செய்ததாக வழக்குப் பதியும் முரண்பாடான சூழல் நிலவுகிறது.

மேலும், இத்துறையைக் காரணம் காட்டி காவல் துறையினரிடையே நடக்கும் லஞ்ச ஊழல்களைத் தடுக்கவும் இச்சட்ட மாற்றம் உதவும் எனக் கருதப்படுகிறது.

அதிபர் ஆதரவு

குடிமக்கள் மனுவும் அதிபர் போலிடிமிர் ஜெலென்ஸ்கியின் ஆதரவும்

ஒரு மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களைக் கொண்ட சுவிட்லானா த்வோர்னிகோவா என்ற படைப்பாளி, காவல் துறை சோதனையைத் தொடர்ந்து உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் இணையதளத்தில் மனு ஒன்றை அளித்தார்.

அதற்கு 25,000-க்கும் மேற்பட்ட உக்ரைனியர்கள் ஆதரவு தெரிவித்ததைத் தொடர்ந்து, இக்கோரிக்கை அதிகாரப்பூர்வ அரசியல் முன்னுரிமையாக மாறியுள்ளது.

போர்ச் சூழலில் உக்ரைன் அரசு எடுத்துள்ள இந்த விசித்திரமான மற்றும் தைரியமான நடவடிக்கை, சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT