
சீனாவில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த தாய்-மகள் இருவருக்கு கொரோனா தொற்று
செய்தி முன்னோட்டம்
சீனா உள்ளிட்ட உலக நாடுகளில் தற்போது மீண்டும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா தொற்று பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நேற்று காலை 9.40 மணியளவில் இலங்கையில் இருந்து மதுரைக்கு வந்த ஏர் லங்கா விமானத்தில் 70 பயணிகள் வந்தடைந்தனர்.
இவர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் சீனாவில் இருந்து இலங்கை வந்தடைந்து, மதுரைக்கு வந்த தாய்-மகள் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து அவர்கள் தற்போது தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
மாதிரிகள் எடுக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளது
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டடோருக்கு பிஎப் வைரஸ் பாதிப்பு குறித்து பரிசோதனை
சீனாவில் இருந்து வந்து கொரோனா பாதிப்பிற்க்கு உள்ளாகிய பெண் பிரதிபா மற்றும் அவரது 6 வயது மகள் பிரித்தியங்கார ரிகா அவர்களது தாயகம் திரும்பியுள்ளனர்.
பிரதிபாவின் கணவர் சுப்பிரமணியம் சீனாவில் பணி புரிந்து வந்துள்ளார், அவருடன் அவர் மனைவி பிரதிபா மற்றும் மகள் ரிகா வசித்து வந்துள்ளார்கள்.
வேலை காரணமாக சுப்பிரமணியம் ஜெர்மனி சென்றதால் இவர்கள் இருவரும் தமிழகம் திரும்பியுள்ளதாக விசாரித்ததில் தெரியவந்துள்ளது.
தொற்று உறுதி செய்யப்பட்ட இருவரையும் சுகாதார துறை தொடர்ந்து கண்காணித்து வரும் நிலையில், இவர்களுக்கு புது உருமாறிய பிஎப்7 வைரஸ் இருக்கிறதா என்பதை கண்டறிய தாய்-மகள் இருவரின் மாதிரிகளும் எடுக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, மதுரை நிலையம் முழுவதும் கொரோனா பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.