LOADING...
ஈரான் ஒத்துழைத்தாலும் இல்லாவிட்டாலும் ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும்; அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கும் முன் டிரம்ப் கொடுத்த மெசேஜ்
ஈரான் ஒத்துழைத்தாலும் இல்லாவிட்டாலும் ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் என டிரம்ப் அறிவிப்பு

ஈரான் ஒத்துழைத்தாலும் இல்லாவிட்டாலும் ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும்; அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கும் முன் டிரம்ப் கொடுத்த மெசேஜ்

எழுதியவர் Sekar Chinnappan
Apr 11, 2026
09:07 am

செய்தி முன்னோட்டம்

பாகிஸ்தானில் அமெரிக்கா மற்றும் ஈரான் பிரதிநிதிகள் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியான கருத்தைத் தெரிவித்துள்ளார். உலகளாவிய கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு போக்குவரத்தில் ஐந்தில் ஒரு பங்கைத் தீர்மானிக்கும் ஹார்முஸ் ஜலசந்தி, ஈரானின் ஒத்துழைப்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் மிக விரைவில் திறக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நாங்கள் அந்தப் பகுதியை மிக விரைவாகத் திறக்கப் போகிறோம், ஒருவேளை அது நடக்கவில்லை என்றால், நாங்கள் அதனை முடித்து வைப்போம்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முதன்மை இலக்கு

அணு ஆயுதமே முதன்மை இலக்கு

ஈரானுடனான ஒரு வெற்றிகரமான ஒப்பந்தம் எதனைக் குறிக்கும் என்ற கேள்விக்கு பதில் அளித்த டிரம்ப், "ஈரானிடம் அணு ஆயுதம் இருக்கக் கூடாது. அதுதான் இந்த ஒப்பந்தத்தின் 99 சதவீத இலக்கு." என்று அப்பட்டமாகத் தெரிவித்தார். பிப்ரவரி 28 அன்று தொடங்கிய இந்த மோதலினால் உலகப் பொருளாதாரம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ள நிலையில், ஈரானிடம் அணு ஆயுதங்கள் சேருவதை முறியடிப்பதே அமெரிக்காவின் தற்போதைய வெளியுறவுக் கொள்கையின் பிரதான நோக்கமாக உள்ளது.

பேச்சுவார்த்தை

பாகிஸ்தானில் தொடங்கும் மெகா பேச்சுவார்த்தை

கடந்த செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்ட இரண்டு வார காலத் தற்காலிகப் போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து, நிரந்தர அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதற்காக இரு நாடுகளும் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சந்திக்கின்றன. அமெரிக்கத் தரப்பில் துணை அதிபர் ஜேடி வான்ஸ் தலைமையிலான குழுவும், ஈரான் தரப்பில் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாப் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி தலைமையிலான குழுவும் இதில் பங்கேற்கின்றன. பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்பின் மத்தியஸ்தத்தில் இந்தப் பேச்சுவார்த்தை இன்று சனிக்கிழமை தொடங்குகிறது.

Advertisement

பொருளாதார நெருக்கடி

பொருளாதார நெருக்கடியும் உலக நாடுகளின் பார்வையும்

போர் தொடங்கியதில் இருந்து ஹார்முஸ் ஜலசந்தி ஈரானால் முடக்கப்பட்டுள்ளதால், சர்வதேசச் சந்தையில் எண்ணெய் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட போதிலும், இந்த நீர்வழிப்பாதையில் போக்குவரத்து இன்னும் சீராகவில்லை. இந்தப் பேச்சுவார்த்தையில் எட்டப்படும் முடிவுகள், சர்வதேச நிதிச் சந்தைகள் மற்றும் எரிசக்தித் துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகம் முழுவதும் இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவுகளை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

Advertisement