LOADING...
"இன்று இரவோடு ஒரு நாகரிகமே அழியும்": ஈரானுக்கு ட்ரம்ப் விடுத்த இறுதி எச்சரிக்கை
ஈரானுக்கு ட்ரம்ப் விடுத்த இறுதி எச்சரிக்கை

"இன்று இரவோடு ஒரு நாகரிகமே அழியும்": ஈரானுக்கு ட்ரம்ப் விடுத்த இறுதி எச்சரிக்கை

எழுதியவர் Venkatalakshmi V
Apr 07, 2026
06:12 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரான் மீது இதுவரை இல்லாத வகையிலான மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். ஈரானிய நாகரிகமே இன்று இரவோடு முடிவுக்கு வரக்கூடும் என்று அவர் குறிப்பிட்டுள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், "ஒரு முழு நாகரிகமும் இன்று இரவு அழியும், அது மீண்டும் ஒருபோதும் திரும்பாது. இது நடப்பதை நான் விரும்பவில்லை, ஆனால் இது அநேகமாக நடக்கும்" என்று பதிவிட்டுள்ளார். மேலும், இன்றைய இரவு உலக வரலாற்றிலேயே மிக முக்கியமான தருணமாக இருக்கும் என்றும் அவர் வர்ணித்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

காலக்கெடு

48 மணிநேரம் முதல் 408 மணிநேரம் வரை: நீட்டிக்கப்பட்ட காலக்கெடு

ஹார்முஸ் நீரிணையை திறக்க வேண்டும் என்று ஈரான் மீது ட்ரம்ப் விதித்த 48 மணிநேரக் காலக்கெடு, பலமுறை நீட்டிக்கப்பட்டு தற்போது மொத்தம் 408 மணிநேரங்களாக அதிகரித்துள்ளது. முதலில் 5 நாட்கள், பின்னர் மார்ச் இறுதியில் கூடுதலாக 10 நாட்கள் என நீட்டிக்கப்பட்டு, தற்போது இறுதி எச்சரிக்கையாக ஏப்ரல் 7 (இன்று) காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ட்ரம்ப் ஒருபுறம் கடுமையான மிரட்டல்களை விடுத்தாலும், மறுபுறம் காலக்கெடுவைத் தொடர்ந்து தள்ளிப்போட்டு வருவது ஒரு சிக்கலான ராஜதந்திர நகர்வாகவே பார்க்கப்படுகிறது.

Advertisement

திருப்பம்

உலக வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்பம்?

"ஸ்மார்ட்டான மற்றும் தீவிரவாதம் குறைந்த மனநிலைகள் அங்கு உருவானால், ஒரு புரட்சிகரமான மாற்றம் நிகழலாம்" என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். ஈரான் மக்களுக்கு இறைவனின் ஆசி கிடைக்கட்டும் என்று கூறி தனது பதிவை முடித்துள்ள அவர், இன்று இரவு 8 மணிக்கு (அமெரிக்க நேரம்) என்ன நடக்கப்போகிறது என்பதை உலகையே உற்று நோக்க வைத்துள்ளார். போர் மூளுமா அல்லது அமைதிப் பேச்சுவார்த்தை வெற்றி பெறுமா என்பது இன்னும் சில மணிநேரங்களில் தெரிந்துவிடும்.

Advertisement