"நான் முடிவெடுக்கும் வரை போர் நீடிக்கும்!": ஈரான் போர்நிறுத்தம் குறித்து அமெரிக்கா அதிபர்
செய்தி முன்னோட்டம்
ஈரானுக்கு எதிரான போர் எவ்வளவு காலம் நீடிக்கும் என்ற கேள்விக்கு, "எனக்கு காலக்கெடு எதுவும் இல்லை; இந்த வேலையை நான் முடித்தே தீருவேன்" என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பதிலளித்துள்ளார். ஏற்கனவே இந்த போர் 4 முதல் 5 வாரங்கள் வரை நீடிக்கலாம் எனக் கூறியிருந்த நிலையில், தற்போது அவர் தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளார். ஈரான் மீதான தாக்குதலுக்குப் பின்னால் நான்கு முக்கியமான காரணங்களை ட்ரம்ப் பட்டியலிட்டுள்ளார்: 1. அணு ஆயுதம்: ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிக்கக் கூடாது 2. பாலிஸ்டிக் ஏவுகணைகள்:ஈரானின் ஏவுகணைத் திட்டங்களை முழுமையாக முடக்க வேண்டும். 3. தலைமை மாற்றம்: ஈரானை வழிநடத்த "அறிவார்ந்த மற்றும் விவேகமான" ஒரு புதிய தலைவரை நியமிக்க வேண்டும்.
பேச்சுவார்த்தை
"பேச்சுவார்த்தைக்கு ஈரான் அழைக்கிறது; ஆனால் காலம் கடந்துவிட்டது"
ஈரான் தரப்பிலிருந்து பேச்சுவார்த்தைக்கான அழைப்புகள் வருவதாகக் குறிப்பிட்ட ட்ரம்ப், "அவர்கள் டீல் பேச அழைக்கிறார்கள், ஆனால் இப்போது காலம் கடந்துவிட்டது. அவர்களை விட இப்போது நாங்கள் அதிகம் போரிட விரும்புகிறோம்" என்று கூறியுள்ளார். அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் இணைந்து ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் கட்டமைப்புகளை ஒவ்வொரு மணி நேரமும் அழித்து வருவதாக அவர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். வரும்போது உயிரிழப்புகள் தவிர்க்க முடியாதவை. இது குறித்து நாங்கள் தொடர்ந்து சிந்தித்துத் திட்டமிட்டு வருகிறோம். சில உயிரிழப்புகள் ஏற்படலாம் என்பதை எதிர்பார்க்கிறோம்" என யதார்த்தமான ஆனால் கவலையளிக்கும் பதிலை அளித்துள்ளார்.