Loading...
இடைத்தேர்தல் பின்னடைவால் டிரம்ப் அதிரடி நடவடிக்கை; வெள்ளை மாளிகை தலைமை அதிகாரி சூசி வைல்ஸ் மாற்றம்
வெள்ளை மாளிகை தலைமை அதிகாரி சூசி வைல்ஸ் மாற்றம்

இடைத்தேர்தல் பின்னடைவால் டிரம்ப் அதிரடி நடவடிக்கை; வெள்ளை மாளிகை தலைமை அதிகாரி சூசி வைல்ஸ் மாற்றம்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 07, 2026
08:10 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்க இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சி எதிர்பார்த்த வெற்றியை பெறத் தவறி பெரும் பின்னடைவை சந்தித்தது. இந்த தோல்வியைத் தொடர்ந்து அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது வெள்ளை மாளிகை நிர்வாகத்தில் முதல் பெரிய அதிரடி மாற்றத்தை மேற்கொண்டுள்ளார். இதுவரை தலைமை அதிகாரியாக பணியாற்றி வந்த சூசி வைல்ஸை பதவியிலிருந்து நீக்கிவிட்டு, தனது தீவிர ஆதரவாளரான ஸ்டீபன் மில்லரை அந்த புதிய பதவியில் நியமிப்பதாக டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த புதிய மாற்றம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

புதிய பொறுப்பு

சூசி வைல்ஸின் பங்களிப்பும் அவருக்கு வழங்கப்பட்டுள்ள புதிய பொறுப்பும்

கடந்த 2024 அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற சூசி வைல்ஸ் மிக முக்கியப் பங்காற்றினார்.

அதன் காரணமாக வெள்ளை மாளிகையின் முதல் பெண் தலைமை அதிகாரியாக அவர் நியமிக்கப்பட்டிருந்தார்.

அவரது சேவைகளுக்குத் தனது நன்றியைத் தெரிவித்துள்ள அதிபர் டிரம்ப், அவரைத் தங்களின் அரசியல் அமைப்பான டிரம்ப் பொலிட்டிகல் ஆபரேஷன் பிரிவிற்கு மாற்றுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதிபர் டிரம்புடன் இணைந்து பணியாற்றியது தனது வாழ்நாளின் மாபெரும் கெளரவம் எனச் சூசி வைல்ஸ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

அரசியல் பின்னணி

புதிய தலைமை அதிகாரி ஸ்டீபன் மில்லரின் நீண்டகால அரசியல் பின்னணி

தற்போது 41 வயதாகும் ஸ்டீபன் மில்லர், டிரம்ப் நிர்வாகத்தின் தீவிர ஆதரவாளராகவும் கடுமையான குடியேற்றக் கொள்கைகளை வகுத்த முதன்மை உத்தியோகஸ்தராகவும் அறியப்படுகிறார்.

கடந்த 2016 தேர்தலிலிருந்தே டிரம்புடன் இணைந்து பணியாற்றி வரும் மில்லர், இதற்கு முன்பு துணைத் தலைமை அதிகாரியாகவும் உள்நாட்டுப் பாதுகாப்பு ஆலோசகராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

அத்துடன் முன்னாள் செனட்டர் ஜெஃப் செஷன்ஸின் முக்கிய உதவியாளராகவும் பணியாற்றிய நீண்ட அனுபவம் கொண்டவர்.

இவரின் புதிய நியமனம் டிரம்ப் ஆதரவாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ADVERTISEMENT

மில்லர் சூளுரை

அமெரிக்க அரசியலில் எழும் எதிர்பார்ப்புகளும் மில்லரின் சூளுரையும்

புதிய பதவி உயர்வை பெற்றதைத் தொடர்ந்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஸ்டீபன் மில்லர் தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார்.

அதில் அதிபர் டிரம்ப் மற்றும் அமெரிக்கக் குடியரசின் நலன்களை பாதுகாக்கத் தீவிரமாக போராடத் தயாராக இருப்பதாக சூளுரைத்துள்ளார்.

இடைத்தேர்தல் பின்னடைவுக்குப் பிறகு வெள்ளை மாளிகையின் நிர்வாகத்தையும் அரசியல் உத்திகளையும் மிகவும் ஆக்ரோஷமான முறையில் கொண்டு செல்லவே டிரம்ப் இந்த புதிய மாற்றத்தை மேற்கொண்டுள்ளதாக அரசியல் பகுப்பாய்வாளர்கள் கருதுகின்றனர்.

ADVERTISEMENT