Loading...
பிரான்சில் பள்ளிகள் பற்றி எரிய காரணம் இஸ்லாம் என பழி போடும் டிரம்ப்; பின்னணி என்ன?
டிரம்பின் இந்த அறிக்கை சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

பிரான்சில் பள்ளிகள் பற்றி எரிய காரணம் இஸ்லாம் என பழி போடும் டிரம்ப்; பின்னணி என்ன?

எழுதியவர் Venkatalakshmi V
Oct 07, 2026
10:29 am

செய்தி முன்னோட்டம்

பிரான்சில் தொடக்கப் பள்ளிகள் முதல் உயர்நிலைப் பள்ளிகள் வரை தீவிரமடைந்துள்ள மாணவர் போராட்டங்களுக்கு இஸ்லாமிய சமூகத்தினரும், "கட்டுப்பாடற்ற பெருந்திரள் புலம்பெயர்வுமே" காரணம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். பிரான்சில் செப்டம்பர் 21 முதல் நடைபெற்று வரும் மாணவர் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த டிரம்ப், "பிரான்சில் நடப்பது கட்டுப்பாடற்ற புலம்பெயர்வின் விளைவு. இது பள்ளிகளை பற்றியது அல்ல, பிரான்ஸ் நாட்டைக் கைப்பற்ற நினைக்கும் இஸ்லாத்தின் முயற்சி" எனத் தெரிவித்துள்ளார். டிரம்பின் இந்த அறிக்கை சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பின்னணி

போராட்டத்தின் உண்மையான பின்னணி

பாரிஸின் புறநகர் பகுதியில் தொடங்கிய இப்போராட்டம், பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாமை, கட்டமைப்பு வசதிகள் குறைபாடு மற்றும் நிதி பற்றாக்குறை ஆகியவற்றைக் கண்டித்தே நடைபெறுகிறது.

இப்போராட்டத்திற்கும் மதம் அல்லது புலம்பெயர்வுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என பிரெஞ்சு அதிகாரிகள் தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

2.5 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் வீதிகளில் இறங்கிப் போராடி வரும் நிலையில், பல இடங்களில் காவல்துறையினருக்கும் மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

பிரான்ஸ் கல்வி அமைச்சர் எடுவார்ட் ஜெஃப்ராய் தகவல்படி, இதுவரை 24 பள்ளிகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன அல்லது சேதப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், 215 மாணவர்கள், 85 பள்ளி ஊழியர்கள் மற்றும் 700க்கும் மேற்பட்ட காவல்துறையினர் காயமடைந்துள்ளனர்.

டிரம்ப் தனது அரசியல் ஆதாயத்திற்காக இந்தப் பிரச்னையைத் திசைதிருப்புவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ADVERTISEMENT