LOADING...
ஹார்முஸ் ஜலசந்தி முற்றுகை நீக்கம்? அமெரிக்க அதிபர் டிரம்ப் - பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் முக்கியப் பேச்சுவார்த்தை
ஆசிம் முனீரின் இந்த ஆலோசனையைத் தான் பரிசீலிப்பதாக அதிபர் டிரம்ப் உறுதியளித்துள்ளார்

ஹார்முஸ் ஜலசந்தி முற்றுகை நீக்கம்? அமெரிக்க அதிபர் டிரம்ப் - பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் முக்கியப் பேச்சுவார்த்தை

எழுதியவர் Venkatalakshmi V
Apr 20, 2026
07:12 pm

செய்தி முன்னோட்டம்

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தை தணிக்கும் வகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பாகிஸ்தான் ராணுவத் தளபதி பீல்டு மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோரிடையே இன்று (ஏப்ரல் 20, 2026) மிக முக்கியமான தொலைபேசி உரையாடல் நடைபெற்றது. இதில் ஹார்முஸ் ஜலசந்தியில் நிலவும் முட்டுக்கட்டையை நீக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீர், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஒரு முக்கிய மத்தியஸ்தராக செயல்பட்டு வருகிறார்.

நற்செய்தி

கோரிக்கையை ஏற்றுக்கொள்ள டிரம்ப் முடிவு

இந்த பேச்சுவார்த்தையின் போது அவர், ஈரானியத் துறைமுகங்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள கடற்படை முற்றுகையே, இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தடைபடுவதற்கு முக்கியக் காரணம் என சுட்டிக்காட்டினார் என நியூஸ்18 செய்தி தெரிவிக்கிறது. ஆசிம் முனீரின் இந்த ஆலோசனையைத் தான் பரிசீலிப்பதாக அதிபர் டிரம்ப் உறுதியளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்கா விதித்துள்ள முற்றுகை விரைவில் நீக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்து என்ன?

முற்றுகை நீக்கினால் அடுத்து என்ன?

இஸ்லாமாபாத்தில் உள்ள வட்டாரங்கள் தெரிவிக்கும் தகவலின்படி: 1. போர்நிறுத்தம் நீட்டிப்பு: அமெரிக்கா முற்றுகையை விலக்கினால், அதனைத் தொடர்ந்து ஒரு முழுமையான போர்நிறுத்த ஒப்பந்தம் அறிவிக்கப்படலாம். 2. பேச்சுவார்த்தை தொடக்கம்: அதன் பிறகு, ஈரான் தனது அதிகாரப்பூர்வக் குழுவை மீண்டும் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு அனுப்பி, அமெரிக்காவுடன் நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடும். 3. சர்வதேச எரிசக்தி விநியோகம்: உலகின் 20% கச்சா எண்ணெய் செல்லும் இந்த வழித்தடம் தடையின்றித் திறக்கப்படுவது உலகப் பொருளாதாரத்திற்குப் பெரும் நிம்மதியைத் தரும்.

Advertisement

ஈரான்

ஈரானின் தற்போதைய நிலைப்பாடு

இருப்பினும், ஈரானிய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி, அமெரிக்காவின் அணுகுமுறை "தீவிரமானதாக இல்லை" எனக் குற்றம் சாட்டியுள்ளார். ஈரானின் தேசிய நலன்களில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளப் போவதில்லை என்றும், எந்தவொரு காலக்கெடுவையும் ஏற்க முடியாது என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். ஏப்ரல் 22-ம் தேதியுடன் தற்காலிகப் போர்நிறுத்தம் முடிவுக்கு வரவுள்ள நிலையில், டிரம்பின் இந்த அதிரடி முடிவு ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement