27 ஆண்டுகளுக்கு பிறகு ஐரோப்பாவில் தோன்றிய அரிய 'சூரிய அஸ்தமன' முழு சூரிய கிரகணம்
செய்தி முன்னோட்டம்
ஆகஸ்ட் 12 அன்று வட அரைக்கோளத்தின் பல பகுதிகளில் தோன்றிய முழு சூரிய கிரகணம், லட்சக்கணக்கான மக்களை பரவசத்தில் ஆழ்த்தியது. குறிப்பாக, ஐரோப்பிய கண்டத்தில் கடந்த 1999-ஆம் ஆண்டிற்கு பிறகு 27 ஆண்டுகள் கழித்து நிகழ்ந்த முதல் முழு சூரிய கிரகணம் இதுவாகும். நிலவானது பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சரியாக கடந்து சென்றபோது, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, வடக்கு ரஷ்யா, ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலின் சில பகுதிகளில் முழு இருள் சூழ்ந்தது. இப்பாதியில் அமைந்த பகுதிகள் சுமார் 2 நிமிடங்கள் 18 வினாடிகள் வரை முழு சூரிய கிரகணத்தைக் கண்டன. ஸ்பெயின் மற்றும் மேற்கு ஐரோப்பாவின் சில இடங்களில், சூரியன் மறையும் நேரத்தில் இக்கிரகணம் நிகழ்ந்ததால் அரிய 'சூரிய அஸ்தமன கிரகணம்' காட்சியாக தென்பட்டது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
🌅 🌕 TOTALITY IN SPAIN: The total solar eclipse created a picturesque view as the moon passed in front of the sun on Wednesday, darkening the skyline during sunset.#Solareclipse #Earth #Moon #Sun #Spain #FOXWeather pic.twitter.com/NU5PQzToat
— FOX Weather (@foxweather) August 12, 2026
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Nature is truly breathtaking 🌑#SolarEclipse pic.twitter.com/SzO1Z6lhT6
— Ybliss (@blisscrtv) August 12, 2026
இந்தியா
இந்தியாவில் பார்க்க முடியாத சூழல்
முழு கிரகணத்தின் போது சூரியனின் பிரகாசமான பகுதி மறைக்கப்பட்டு, அதன் வெளிப்புற வளிமண்டலமான கொரோனா தெளிவாகப் புலப்பட்டது.
வழக்கமாக சூரியனின் அதிக வெளிச்சத்தால் மறைக்கப்படும் கொரோனாவின் கட்டமைப்பு மற்றும் சூரியனின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு இந்நிகழ்வு பெரும் வாய்ப்பாக அமைந்தது.
கிரீன்லாந்தில் தொடங்கிய இந்நிகழ்வு சர்வதேச நேரப்படி(GMT) மாலை 15:34 மணிக்கு தொடங்கி 19:58 மணிக்கு நிறைவடைந்தது.
இக்காலக்கட்டத்தில் இந்தியாவில் இரவு நேரமாக இருந்ததாலும், நிழல் பாதைக்கு வெளியே இந்தியா அமைந்திருந்ததாலும் இந்தியாவிலிருந்து இதனை நேரடியாக காண முடியவில்லை.
2026-ஆம் ஆண்டின் ஒரே முழு சூரிய கிரகணம் இது என்பதால் உலகெங்கிலும் உள்ள வானியல் ஆர்வலர்களும் புகைப்படக் கலைஞர்களும் திரளாகக் கூடி இதைக் கண்டு ரசித்தனர்.