LOADING...
தாய்லாந்து பள்ளியில் துப்பாக்கிச் சூடு: மாணவர்கள், ஆசிரியர்களை பிணைக்கைதிகளாக பிடித்த நபர்
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை பிணைக்கைதிகளாக பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தாய்லாந்து பள்ளியில் துப்பாக்கிச் சூடு: மாணவர்கள், ஆசிரியர்களை பிணைக்கைதிகளாக பிடித்த நபர்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 11, 2026
05:38 pm

செய்தி முன்னோட்டம்

தாய்லாந்தின் சாங்க்லா (Songkhla) மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில், புதன்கிழமை அன்று துப்பாக்கி ஏந்திய இளைஞர் ஒருவர் புகுந்து அங்கிருந்தவர்களை பிணைக்கைதிகளாக பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் குறைந்தது மூன்று பேர் காயமடைந்துள்ளனர். சாங்க்லா மாகாணத்தின் ஹாட் யாய் (Hat Yai) மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளி கட்டிடத்திற்குள் 18 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்தார். அவர் அங்கிருந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துக்கொண்டு, பலமுறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பள்ளியில் பெரும் பதற்றம் நிலவியது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

நடவடிக்கை

துரித நடவடிக்கை

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார், பள்ளியை சுற்றி வளைத்து அந்த இளைஞருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். நீண்ட போராட்டத்திற்கு பிறகு, துப்பாக்கி ஏந்திய அந்த இளைஞரை போலீஸார் வெற்றிகரமாக கைது செய்து பிணைக்கைதிகளை மீட்டனர். காயமடைந்த மூன்று நபர்களும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தாய்லாந்தில் துப்பாக்கி கலாச்சாரம் மற்றும் வன்முறை சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு, முன்னாள் காவல்துறை அதிகாரி ஒருவர் நர்சரி பள்ளி ஒன்றில் நடத்திய கொடூர தாக்குதலில் 22 குழந்தைகள் உட்பட 36 பேர் கொல்லப்பட்டது உலகையே உலுக்கியது குறிப்பிடத்தக்கது.

Advertisement