LOADING...
திரைக்கதை மன்னன் இயக்குநர் பாக்யராஜ் மாரடைப்பால் காலமானார்
இயக்குநர் பாக்யராஜ் காலமானார்

திரைக்கதை மன்னன் இயக்குநர் பாக்யராஜ் மாரடைப்பால் காலமானார்

எழுதியவர் Sekar Chinnappan
Jun 27, 2026
10:01 am

செய்தி முன்னோட்டம்

தமிழ் திரையுலகின் மிகச்சிறந்த இயக்குநரும், வசன கர்த்தாவும், திரைக்கதை மன்னன் என்று ஒட்டுமொத்த ரசிகர்களாலும் கொண்டாடப்படுபவருமான கே.பாக்யராஜ் இன்று (ஜூன் 27) காலை சென்னையில் காலமானார். 73 வயதான அவருக்கு இன்று அதிகாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு அவசர கால தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் தற்பொழுது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அவரது மறைவு கோலிவுட் மற்றும் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement