LOADING...
OLED vs 4K UHD டிஸ்பிளே: இரண்டுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன? எதை வாங்கலாம்?
OLED vs 4K UHD டிஸ்பிளே

OLED vs 4K UHD டிஸ்பிளே: இரண்டுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன? எதை வாங்கலாம்?

எழுதியவர் Sekar Chinnappan
Jun 27, 2026
10:18 am

செய்தி முன்னோட்டம்

புதிய ஸ்மார்ட்போன், தொலைக்காட்சி, லேப்டாப் அல்லது கணினி மானிட்டர்களை வாங்க நாம் திட்டமிடும்போது OLED மற்றும் 4K UHD ஆகிய இரண்டு வார்த்தைகளை அடிக்கடி பார்க்க முடிகிறது. இவை இரண்டும் ஒன்றுக்கொன்று போட்டியிடும் தொழில்நுட்பங்கள் என்று பலரும் நினைத்துக் கொள்கிறார்கள், ஆனால் அது உண்மையல்ல. இவை இரண்டும் முற்றிலும் வெவ்வேறான அம்சங்களைக் குறிப்பவை ஆகும். எளிமையாகச் சொன்னால், OLED என்பது ஒரு திரை எவ்வாறு காட்சிகளை உருவாக்குகிறது என்பதை விளக்கும் தொழில்நுட்பம் ஆகும். மறுபுறம் UHD என்பது அந்தத் திரையில் எத்தனை பிக்சல்கள் உள்ளன, அதாவது படம் எவ்வளவு துல்லியமாகத் தெரியும் என்பதை விளக்கும் ரெசொலூஷன் ஆகும்.

OLED டிஸ்பிளே

OLED டிஸ்பிளே என்றால் என்ன மற்றும் அதன் நன்மைகள்

OLED என்பது ஆர்கானிக் லைட் எமிட்டிங் டயோட் என்பதன் சுருக்கமாகும். இதற்குப் பின்னால் பெரிய பேக்லைட் வெளிச்சம் தேவைப்படாது. இதன் ஒவ்வொரு பிக்சலும் தனக்குத்தானே தனித்தனியாக ஒளிரும். இதனால் திரையில் மிக ஆழமான கச்சிதமான கருப்பு நிறமும், சிறந்த கான்ட்ராஸ்ட் விகிதமும், துல்லியமான வண்ணங்களும் பார்வையாளர்களுக்குக் கிடைக்கின்றன. மேலும் இந்தத் திரைகளைக் கோணலாகப் பார்த்தாலும் நிறம் மாறாது என்பதுடன், இவற்றை மெல்லிய வடிவிலும் தயாரிக்க முடியும். எனினும் இதன் விலை சற்றே அதிகம் என்பதும், நீண்ட காலப் பயன்பாட்டில் டிஸ்பிளே பர்ன்-இன் ஆகும் வாய்ப்பு உள்ளது என்பதும் இதன் சில குறைபாடுகளாகும்.

4K UHD டிஸ்பிளே

4K UHD டிஸ்பிளே என்றால் என்ன மற்றும் அதன் நன்மைகள்

UHD என்பது அல்ட்ரா ஹை டெபனிஷன் என்பதன் சுருக்கமாகும். இதன் பொருள் அந்தத் திரையானது 3840 x 2160 பிக்சல்கள் கொண்ட ரெசொலூஷனைக் கொண்டுள்ளது என்பதாகும், இதனைப் பொதுமக்கள் பரவலாக 4K என்றும் அழைக்கிறார்கள். இந்த 4K ரெசொலூஷன் திரையானது எல்இடி, கியூலெட், மினி-எல்இடி அல்லது ஓஎல்இடி என எந்தவொரு பேனல் தொழில்நுட்பத்தைக் கொண்டும் தயாரிக்கப்படலாம். இந்தத் திரைகள் பெரிய அளவில் இருக்கும்போது மிகத் தெளிவான படங்களையும், மிக நுணுக்கமான விபரங்களையும் தெளிவாகக் காட்டும் என்பதால் 4K திரைப்படங்களைப் பார்ப்பதற்கும் கேமிங் விளையாடுவதற்கும் இது மிகவும் சிறந்ததாகக் கருதப்படுகிறது.

Advertisement

பயன்பாடு

சந்தையில் இந்தத் தொழில்நுட்பங்கள் எங்குப் பயன்படுத்தப்படுகின்றன?

தற்போதைய காலகட்டத்தில் சந்தையில் வெளியாகும் சாம்சங் கேலக்ஸி எஸ் சீரிஸ், ஐபோன் ப்ரோ மாடல்கள், கூகுள் பிக்சல் மற்றும் ஒன்பிளஸ் போன்ற முன்னணி பிராண்டுகளின் முதன்மை ஸ்மார்ட்போன்களில் OLED திரைகளே பயன்படுத்தப்படுகின்றன. மேலும் ஆசஸ், டெல் எக்ஸ்பிஎஸ் மற்றும் லெனோவா யோகா போன்ற உயர்தர லேப்டாப்களிலும், எல்ஜி, சோனி, பானாசோனிக் போன்ற நிறுவனங்களின் பிரீமியம் டிவிகளிலும் OLED தொழில்நுட்பத்தைக் காணலாம். அதே நேரத்தில், பட்ஜெட் விலையில் கிடைக்கும் சாம்சங், சியோமி, டிசிஎல் மற்றும் ஹைசென்ஸ் போன்ற நிறுவனங்களின் 4K டிவிகளில் UHD LED திரைகள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.

Advertisement

உங்கள் தேவை

உங்களுடைய தேவைக்கு எதனைத் தேர்வு செய்யலாம்?

உங்களுக்கு பட்ஜெட் ஒரு தடையல்ல, உலகின் மிகச் சிறந்த காட்சி அனுபவம், ஆழமான கருப்பு நிறம் மற்றும் உயர்தர சினிமா அல்லது கேமிங் அனுபவம் தான் முக்கியம் என்று நினைத்தால் நீங்கள் OLED டிவியை தாராளமாகத் தேர்வு செய்யலாம். மாறாக, உங்களுக்குக் குறைந்த பட்ஜெட்டில் பெரிய திரையில் தெளிவான 4K ரெசொலூஷன் இருந்தால் போதும் என்று நினைத்தால் நீங்கள் சாதாரண UHD LED திரைகளைத் தேர்வு செய்வது சிறந்த மதிப்பைத் தரும். ஒருவேளை உங்களால் அதிகப் பணம் செலவழிக்க முடியும் என்றால், 4K UHD மற்றும் OLED ஆகிய இரண்டுமே ஒன்றாக இணைந்து வரும் ஒரு டிஸ்பிளேயைத் தேர்வு செய்வதே மிகச் சிறந்த இறுதித் தேர்வாக இருக்கும்.

Advertisement