வாக்காளர்களின் கோபத்தை எதிர்கொள்ளும் துருக்கிய ஜனாதிபதி
துருக்கி மிக மோசமான பேரழிவை சந்தித்த சில நாட்களுக்குப் பிறகு ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் வாக்காளர்களின் கோபத்தைப் எதிர்கொள்ள தொடங்கி இருக்கிறார். துருக்கி மற்றும் சிரியாவில் 21,000க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்ற பூகம்பம், எர்டோகனின் இரண்டு தசாப்த கால ஆட்சியின் மிகப்பெரும் பேரழிவாகும். இந்த துருக்கிய தலைவர் வரும் மே 14 அன்று நாட்டின் தேர்தலை நடத்த முன்மொழிதிருந்தார். அதன் மூலம், 2028 வரை தனது இஸ்லாமிய அரசாங்கத்தை ஆட்சியில் வைத்திருக்க முடியும் என்று அவர் நம்பினார். அந்த வாக்கெடுப்பு அவர் திட்டமிட்டபடி நடக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட 10 மாகாணங்களில் எர்டோகன் மூன்று மாத கால அவசர நிலையை அறிவித்துள்ளார்.
கோபத்தில் பொங்கிய வாக்காளர்: எர்டோகனின் ஆட்சி நீடிக்குமா?
கடந்த வருடம் பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருந்த துருக்கியை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தி எர்டோகன் மக்களிடம் நல்ல பெயரை வாங்கி கொண்டிருந்த நேரத்தில் இந்த பூகம்பம் நிகழ்ந்திருக்கிறது. இந்த பூகம்ப மீட்பு பணிகளில் "நிச்சயமாக, குறைபாடுகள் உள்ளன." என்று எர்டோகனே புதன்கிழமை(பிப் 8) ஒப்புக்கொண்ட நிலையில், தற்போது துருக்கியின் அதியமான் பகுதியை சேர்ந்த ஹக்கன் தன்ரிவர்டி என்ற ஒரு வாக்காளர் "வாக்கு கேட்டு இங்கு வராதீர்கள்." என்றும் "யாரும் எங்களை ஆதரிக்காததால் நாங்கள் மிகவும் வேதனையடைந்துள்ளோம்." என்றும் தன் கோபத்தையும் வருத்தத்தையும் வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த சம்பவம். எர்டோகனின் ஆட்சி இன்னும் எத்தனை காலம் நீடிக்கும் என்ற கேள்வியை அரசியல் விமர்சகர்கள் மத்தியில் எழுப்பி இருக்கிறது.