உலகின் சிறந்த 50 உணவுகள் பட்டியலில் ஒரே ஒரு இந்திய உணவு தான்!
உலகளவில் இந்தியர்கள் உணவு பிரியர்கள் என்றால் அது மிகையாகாது. வித்யாசமான உணவு வகைகளை தேடி பிடித்து உண்ணுவதில் இந்தியர்களுக்கு ஆர்வம் அதிகம். இந்நிலையில், 'டேஸ்ட் அட்லஸ்' என்னும் அமைப்பு உலகில் பல்வேறு நாடுகளில் உள்ள பொதுமக்களிடம் சுவையான உணவு வகைகள் குறித்து கருத்துக்களை கேட்டறிந்து உணவு பட்டியல் ஒன்றினை வெளியிட்டுள்ளது. இந்த உணவு பட்டியலில் 4.72 புள்ளிகள் பெற்று இத்தாலிய உணவு வகைகள் முதலிடத்தை பிடித்துள்ளது. கிரீஸ், ஸ்பெயின், ஜப்பான் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ள நிலையில், 4.54 புள்ளிகள் பெற்று இந்திய உணவுகள் ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளது. உலகின் பிரபலமான உணவு வகைகள் கொண்ட சீனா 11வது இடத்தை பிடித்துள்ளது.
'டேஸ்ட் அட்லஸ்' அமைப்பின் டாப் 50 உணவு பட்டியலில் இடம்பிடித்த ஒரே இந்திய உணவு ஷாஹி பன்னீர்
இந்திய உணவுகளில் பட்டர் கார்லிக் நான், கீமா, தந்தூரி, ஷாஹி பன்னீர், பன்னீர் டிக்கா, பரத்தா, ரசகுல்லா மற்றும் கரம் மசாலா கலந்த உணவு வகைகள் போன்ற பல்வேறு உணவுகள் 'டேஸ்ட் அட்லஸ்' அமைப்பின் பட்டியலில் சிறந்தவை என்று இடம்பிடித்துள்ளது. உலகளவிலான சிறந்த பாரம்பரிய உணவுகள் பிரிவில் இந்தியா அதிக மதிப்பெண்கள் பெற முடியவில்லை என்னும் பட்சத்தில், டெல்லியில் கேக் டா ஹோட்டலின் ஷாஹி பன்னீர் 4.66 மதிப்பீட்டினை பிடித்து 28வது இடத்தை பிடித்துள்ளது. அதே போல்,பிரபல உணவான பட்டர் சிக்கன் 53வது பிடித்துள்ளது. அதனை தொடர்ந்து, தலைசிறந்த உணவகங்கள் என்னும் பட்டியலில் தமிழகத்தில் உள்ள எந்த உணவகங்களும் முதல் 5 இடங்களில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.