LOADING...
பின் லேடனை வீழ்த்திய அதே டீம்; ஈரானுக்குள் புகுந்து அமெரிக்க வீரரை மீட்ட 'சீல் டீம் 6'
ஈரானுக்குள் புகுந்து அமெரிக்க வீரரை மீட்ட 'சீல் டீம் 6'

பின் லேடனை வீழ்த்திய அதே டீம்; ஈரானுக்குள் புகுந்து அமெரிக்க வீரரை மீட்ட 'சீல் டீம் 6'

எழுதியவர் Venkatalakshmi V
Apr 06, 2026
04:18 pm

செய்தி முன்னோட்டம்

2011-ஆம் ஆண்டு பாகிஸ்தானின் அப்போடாபாத் நகரில் ஒசாமா பின் லேடனை வீழ்த்திய அதே அமெரிக்க கடற்படையின் 'சீல் டீம் 6' (SEAL Team 6) பிரிவினர், 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு ரகசிய அதிரடி வேட்டையை நடத்தியுள்ளனர். இம்முறை ஒரு உயிரை பறிப்பதற்காக அல்ல, ஈரானின் மலைப்பகுதிகளில் சிக்கிய தங்கள் நாட்டு வீரர் ஒருவரின் உயிரைக் காப்பற்றுவதற்காக இந்த ஆபத்தான மீட்புப் பணி அரங்கேறியுள்ளது.

மீட்பு

ஈரானிய மலைப்பகுதிகளில் ஒரு விமானப்படை வீரர் மீட்பு

கடந்த ஏப்ரல் 3-ஆம் தேதி, அமெரிக்காவின் எஃப்-15இ (F-15E) போர் விமானம் ஈரானியப் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதிலிருந்த இரு வீரர்களில் விமானி உடனடியாக மீட்கப்பட்டார், ஆனால் ஆயுத அமைப்பு அதிகாரி ஈரானின் ஜாக்ரோஸ் மலைத்தொடரில் மாயமானார். சுமார் 7,000 அடி உயரத்தில் உள்ள ஒரு மலை இடுக்கில், கையில் ஒரு பிஸ்டல் மற்றும் ரகசிய சிக்னல் கருவியுடன் அவர் 24 மணி நேரத்திற்கும் மேலாகப் பதுங்கியிருந்தார். அவரைப் பிடிப்பதற்காக ஈரானிய ராணுவத்தினர் மற்றும் உள்ளூர் மக்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த நிலையில், அவரை மீட்பது அமெரிக்காவிற்கு பெரும் சவாலாக மாறியது.

ராணுவ நடவடிக்கை

2011 அப்போடாபாத் பாணியில் ஒரு அதிரடி

இந்த மீட்புப் பணியை வெறும் ராணுவ நடவடிக்கையாக மட்டும் பார்க்காமல், ஒரு பெரும் போராகவே அமெரிக்கா கருதியது. 2011-இல் ஒரு ஹெலிகாப்டர் செயலிழந்தபோது அதன் ரகசியங்கள் கசியக்கூடாது என்பதற்காக அமெரிக்கப் படைகள் அதைத் தகர்த்தன. அதே போன்ற ஒரு சூழல் இம்முறையும் ஏற்பட்டது. மீட்புப் பணிக்காகப் பயன்படுத்தப்பட்ட இரண்டு MC-130J போக்குவரத்து விமானங்கள் தொழில்நுட்பக் கோளாறால் முடங்கியபோது, எதிரிகளிடம் அந்தத் தொழில்நுட்பம் சிக்கக்கூடாது என்பதற்காக அமெரிக்கப் படைகள் அவற்றை வெடிவைத்துத் தகர்த்தன.

Advertisement

உதவி

இஸ்ரேலின் உதவி மற்றும் வான்வழிப் போர்

இந்த மாபெரும் மீட்புப் பணியில் அமெரிக்காவிற்கு இஸ்ரேல் முக்கிய உளவுத் தகவல்களை வழங்கியது. ஈரானியப் படைகளின் நகர்வுகளைக் கண்காணித்த இஸ்ரேலிய விமானப்படை, மீட்புப் பணி நடைபெறும் இடத்திற்கு எதிரிகள் வராமல் தடுக்கத் தனது தாக்குதல்களைத் தற்காலிகமாக நிறுத்தி ஒரு பாதுகாப்பான பாதையை (Rescue Corridor) உருவாக்கியது. நூற்றுக்கணக்கான சிறப்புப் படை வீரர்கள், போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் ஒரு புள்ளியில் குவிக்கப்பட்டு, ஈரானியத் தாக்குதலுக்கு இடையிலேயே அந்த காயமடைந்த வீரர் பத்திரமாக மீட்கப்பட்டார்.

Advertisement