ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் விடிய விடிய பயங்கர குண்டுமழை; பற்றி எரியும் முக்கிய நகரங்கள், துறைமுகங்கள்
செய்தி முன்னோட்டம்
மத்திய கிழக்கில் போர் நிறுத்தம் முற்றிலும் முறிந்ததைத்தொடர்ந்து, ஈரானின் ராணுவக் கட்டமைப்புகள் மற்றும் முக்கிய துறைமுகங்களை இலக்கு வைத்து அமெரிக்க ராணுவம் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. ஹார்முஸ் நீரிணையில் ஈரான் அத்துமீறி வணிக கப்பல்களை தாக்கியதற்கு பதிலடியாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்தபடியே இந்த தாக்குதல் அரங்கேறியுள்ளது. தனது 'ட்ரூத் சோஷியல்' பக்கத்தில் குண்டுவெடிப்பு வீடியோக்களை பகிர்ந்த டிரம்ப்,"நேற்று ஈரான் கப்பல்கள் மீது நடத்திய தாக்குதலுக்கு இதுதான் தகுந்த தண்டனை. மீண்டும் இதுபோன்று நடந்தால் விளைவுகள் இன்னும் மோசமாக இருக்கும். ஈரான் தலைவர்கள் நாணயமற்றவர்கள், அவர்களுடன் இனி பேச எதுவும் இல்லை. எது நடந்தாலும் அது மிக வேகமாக நடக்கும். அமெரிக்க ராணுவம் இந்த வேலையை முழுமையாக முடிக்கும்" என்று எச்சரித்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
“This is in retribution for yesterday’s bombing of ships by Iran. If it happens again, it will get much worse!” - President Donald J. Trump pic.twitter.com/TKKf8cIzCr
— The White House (@WhiteHouse) July 8, 2026
ஈரான்
பற்றி எரியும் ஈரானின் முக்கிய நகரங்கள்
ஈரானின் தெற்கு கடற்கரை முதல் ஓமன் வளைகுடா வரை உள்ள பல முக்கிய நகரங்கள் மீது அமெரிக்கா ஏவுகணைகளை வீசித் தாக்கியுள்ளது. ஈரானின் மிகப்பெரிய கடற்படைத் தளம் உள்ள இந்த நகரில் அடுத்தடுத்து 8 பயங்கர குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்டன. அங்குள்ள வான் பாதுகாப்பு அமைப்புகள் தொடர்ந்து ஏவுகணைகளை எதிர்கொண்டன. இந்த இரு நகரங்களிலும் 10-க்கும் மேற்பட்ட குண்டுகள் வெடித்ததில் ஒட்டுமொத்த மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. சாபஹாரில் உள்ள ஷாஹித் பெஹெஷ்டி மற்றும் கலந்தாரி துறைமுகங்களின் கடல் போக்குவரத்து கட்டுப்பாட்டுக் கோபுரம் அமெரிக்கத் தாக்குதலில் சேதமடைந்தது. அங்குள்ள ஒரு மருத்துவமனை மீதும் ஏவுகணைத் துண்டுகள் விழுந்துள்ளன. இரான்ஷஹரிலுள்ள விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், தீயணைப்பு வீரர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அரபு நாடுகள்
பஹ்ரைன், குவைத்தில் ஒலித்த அபாய சைரன்
அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு பதிலடியாக, குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால், பஹ்ரைன் நாட்டின் பல பகுதிகளில் அவசரக்கால அபாய சைரன்கள் ஒொலிக்கவிடப்பட்டன. பொதுமக்கள் அனைவரும் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பஹ்ரைன் உள்நாட்டு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. அதேபோல், தங்களின் வான் பாதுகாப்பு அமைப்புகள் ஈரானின் ஏவுகணைகளை நடுவானில் எதிர்கொண்டு அழித்து வருவதாக குவைத் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் தாக்குதலுக்கு ஈரான் நாடாளுமன்றக் குழுவின் செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் ரெசாய், அமெரிக்காவைக் கண்டு ஈரான் அஞ்சாது என்றும், ஈரானிய ராணுவத்தின் 'பலத்த அடி' அமெரிக்காவுக்குக் காத்திருக்கிறது என்றும் எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.