NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / கடந்த 5 ஆண்டுகளில் $13 பில்லியன் மதிப்புள்ள ஆயுதங்களை ரஷ்யா இந்தியாவுக்கு வழங்கி உள்ளது
    உலகம்

    கடந்த 5 ஆண்டுகளில் $13 பில்லியன் மதிப்புள்ள ஆயுதங்களை ரஷ்யா இந்தியாவுக்கு வழங்கி உள்ளது

    கடந்த 5 ஆண்டுகளில் $13 பில்லியன் மதிப்புள்ள ஆயுதங்களை ரஷ்யா இந்தியாவுக்கு வழங்கி உள்ளது
    எழுதியவர் Sindhuja SM
    Feb 13, 2023, 12:36 pm 1 நிமிட வாசிப்பு
    கடந்த 5 ஆண்டுகளில் $13 பில்லியன் மதிப்புள்ள ஆயுதங்களை ரஷ்யா இந்தியாவுக்கு வழங்கி உள்ளது
    ஆண்டுதோறும் சுமார் $14-15 பில்லியன் ஆயுதங்கள் ரஷ்யாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    கடந்த ஐந்தாண்டுகளில் ரஷ்யா இந்தியாவிற்கு சுமார் 13 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை வழங்கி உள்ளதாகவும் 10 பில்லியனுக்கும் அதிகமான ஆயுதங்களை தற்போது இந்தியா ஆர்டர் செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. ரஷ்யாவின் தற்போதைய ஆர்டர் புத்தகத்தில் சுமார் 20% ரஷ்ய ஆயுதங்களை வாங்கும் உலகின் மிகப்பெரிய நாடாக இந்தியா உள்ளது. மேலும், உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை இந்திய அரசு இதுவரை வெளிப்படையாகக் கண்டிக்கவில்லை. இந்த மோதல் ஆரம்பித்து 12 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், பேச்சு வார்த்தை மூலம் இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். இந்த படையெடுப்பிற்கு பதிலளிக்கும் விதமாக, பல மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது ஆயுதங்கள் உட்பட பொருளாதாரத் தடைகளை விதித்தன.

    இராணுவ-தொழில்நுட்ப ஒத்துழைப்பில் முக்கிய பங்காளியாக இருக்கும் இந்தியா

    இந்தியா, சீனா மற்றும் சில தென்கிழக்கு ஆசிய நாடுகள் ரஷ்ய ஆயுதங்களை வாங்குவதில் தங்கள் ஆர்வத்தைத் தக்கவைத்துள்ளன என்று ரஷ்யாவின் இராணுவ-தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான பெடரல் சேவையின் தலைவர் டிமிட்ரி ஷுகேவ் தெரிவித்துள்ளார். உக்ரைன் மோதல் தொடர்பாக "மேற்கத்திய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அழுத்தம் இருந்தபோதிலும், இராணுவ-தொழில்நுட்ப ஒத்துழைப்பில் ரஷ்யாவின் முக்கிய பங்காளிகளில் ஒன்றாக இந்தியா இருந்து வருகிறது." என்று அவர் கூறியுள்ளார். ரஷ்யாவின் S-400 பாதுகாப்பு அமைப்புகள், ஓசா, பெச்சோரா அல்லது ஸ்ட்ரெலா போன்ற ஏவுகணை அமைப்புகள், Su-30 போர் விமானங்கள், MiG-29 ஹெலிகாப்டர்கள் மற்றும் ட்ரோன்கள்வ ஆகியவற்றில் ஆசிய வாடிக்கையாளர்கள் ஆர்வமாக உள்ளதாக அவர் கூறி இருக்கிறார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சீனா
    உலகம்
    இந்தியா
    ரஷ்யா

    சீனா

    சீனாவில் அதிகரிக்கும் கொரோனா: இந்தியா கவலைப்படத் தேவையில்லை  இந்தியா
    விண்வெளிக்குச் செல்லும் சீனா ராணுவத்தை சாராத முதல் சீனர்.. எப்போது? விண்வெளி
    சீனாவின் புதிய கொரோனா அலை: வாரந்தோறும் 65 மில்லியன் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உலகம்
    "சீன எதிர்ப்புப் பட்டறை": ஜி7 மாநாட்டிற்கு சீனா கடும் எதிர்ப்பு உலகம்

    உலகம்

    இந்தியாவின் UPI சேவையால் அசந்து போன ஜப்பான் அமைச்சர் இந்தியா
    "இளநிலைப் பட்டதாரிகளை வரவேற்கிறோம்": விசா விதி மாற்றங்கள் குறித்து பேசிய இங்கிலாந்து அமைச்சர்  உலக செய்திகள்
    திடீரென்று பச்சையாக மாறிய வெனிஸ் கால்வாய்: காரணம் என்ன  உலக செய்திகள்
    புதினுடன் ரகசிய சந்திப்பு நடத்திய பெலாரஸ் அதிபருக்கு திடீர் உடல் நல பாதிப்பு  உலக செய்திகள்

    இந்தியா

    மணிப்பூர் வன்முறை: இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு மணிப்பூர்
    மல்யுத்த வீரர்கள் பதக்கங்களை கங்கையில் வீசினால் நாங்கள் தடுக்க மாட்டோம்: காவல்துறை  டெல்லி
    மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு உதவிய LeT தலைவர், பாகிஸ்தான் சிறையில் உயிரிழந்தார்  மும்பை
    பரபரப்பு : கங்கை நதியில் பதக்கங்களை வீசி எறிய இந்திய மல்யுத்த வீரர்கள் முடிவு! மல்யுத்தம்

    ரஷ்யா

    உக்ரைனுக்கு $375 மில்லியன் மதிப்பிலான புதிய இராணுவ உதவியை வழங்க இருக்கிறது அமெரிக்கா  உக்ரைன்
    உக்ரைனின் முக்கிய நகரமான பாக்முத்தை கைப்பற்றிய ரஷ்யா: புதின் பாராட்டு  உக்ரைன்
    பராக் ஒபாமா உட்பட 500 அமெரிக்கர்கள் ரஷ்யாவில் நுழையத் தடை! அமெரிக்கா
    ரஷ்யா நடத்திய மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல்: உக்ரைனில் பரபரப்பு  உக்ரைன் ஜனாதிபதி

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023