10 டவ்னிங் ஸ்ட்ரீட்: ரிஷி சுனக் எப்போது தனது அரசாங்க இல்லத்திலிருந்து வெளியேறக்கூடும்?
கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் ரிஷி சுனக், ஐக்கிய இராச்சியத்தின் பொதுத் தேர்தலில் 'சர்' கெய்ர் ஸ்டார்மரின் லேபர் கட்சியிடம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, பிரதமரின் அதிகாரபூர்வ இல்லமான, நம்பர் 10, டவுனிங் ஸ்ட்ரீட்டை விட்டு வெளியேறுவார். லேபர் கட்சியின் வெற்றி, டோரிகளின் 14 ஆண்டுகால ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருகிறது-இது அதிகாரத்தில் ஒரு வரலாற்று மாற்றத்தைக் குறிக்கிறது. அமெரிக்காவை போலல்லாமல், பிரிட்டிஷ் பிரதமர்கள் தேர்தல் தோல்விக்கு மறுநாள் ராஜினாமா செய்வது வழக்கம். அமெரிக்காவில், தேர்தல் முடிவு வந்த பின்னரும், பதவியில் இருந்து வெளியேறும் ஜனாதிபதிகள், தனது அடுத்து பதவிக்கு வரும் நபரிடம் ஆட்சி பொறுப்பை ஒப்படைக்கும் முன்னர், பல மாதங்கள் பதவியில் இருப்பார்கள். கெய்ர் ஸ்டார்மர் இன்று பிற்பகுதியில் அதிகாரப்பூர்வமாக UKவின் பிரதமாராக பதவியேற்க உள்ளார்.
தலைமை மாற்றத்தால், நாட்டின் பொருளாதாரம் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
வெளிச்செல்லும் மற்றும் வரவிருக்கும் அரசாங்கங்களுக்கிடையேயான விவாதங்களுடன் மாறுதல் செயல்முறை இன்று முதல் தொடங்குகிறது. வெளியேறும் தலைவர், பக்கிங்ஹாம் அரண்மனைக்குச் செல்வதற்கு முன் எண் 10இன் படிகளில் உரை நிகழ்த்துவார். அதே நேரத்தில் வேன்கள் அவர் வீட்டின் உடமைகளை வெளியேற்றும். சுனக்கிற்கு UK முழுவதும் பல வீடுகள் உள்ளன. அதில் ஒன்றை அவர் தனது உத்தியோகபூர்வ இல்லமாக மாற்றிக்கொள்ளகூடும். பிரதமர் போரிஸ் ஜான்சனின் கீழ் சுனக் சான்சலராக பதவி வகித்தபோது, அதே டவுனிங் ஸ்ட்ரீட்டில், நம்பர் 11இல் வாழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும், இந்த மாற்றமானது தேக்கமடைந்துள்ள பொருளாதாரத்தை புத்துயிர் அளிப்பது மற்றும் நலிவடைந்த தேசத்தை உயர்த்துவது ஆகிய பாரிய சவாலை வெற்றி பெற்ற லேபர் கட்சிக்கு முன்வைக்கிறது.
தலைமை பூனை லாரியின் பொறுப்புகள்
அரசாங்க இல்லத்திலிருக்கும் மற்றொரு குடியிருப்பாளர் லாரி என்ற பூனை. லாரி முதன்முதலில் டவுனிங் ஸ்ட்ரீட்டிற்கு பிப்ரவரி 15, 2011அன்று தத்தெடுத்து கொண்டு வரப்பட்டது. எலி பிரச்சனையை கையாள அப்போதைய பிரதமர் டேவிட் கேமரூனின் கீழ் இந்த பூனை இங்கே கொண்டு வரப்பட்டது. அரசாங்க பூனை என்ற அதிகாரப்பூர்வ பட்டம் கூட இதற்கு வழங்கப்பட்டது. இதனை டவுனிங் ஸ்ட்ரீட் ஊழியர்கள் பராமரிக்கின்றனர். 2016இல் தனது வெளியேறும் பிரதமராக கேமரூனிடம் லாரி பற்றி கேட்கப்பட்டபோது, கேமரூன், லாரி ஒரு அரசு ஊழியர் என்றும், தனிப்பட்ட சொத்து அல்ல என்றும் தெளிவுபடுத்தினார். 17 வயதான லாரி இதுவரை கேமரூன், தெரசா மே, ஜான்சன், லிஸ் மற்றும் சுனக் ஆகிய ஐந்து பிரதமர்களின் கீழ் தலைமை பூனையாக பணியாற்றியுள்ளது.