Page Loader
ரஷ்ய அதிபர் புதினுக்கு புற்றுநோய்: உக்ரைன் உளவுத்துறை!
"புதின் விரைவிலேயே இறந்துவிடுவார்": உக்ரைன் ராணுவ உளவுத்துறை தலைவர் கிரிலோ புடானோ

ரஷ்ய அதிபர் புதினுக்கு புற்றுநோய்: உக்ரைன் உளவுத்துறை!

எழுதியவர் Sindhuja SM
Jan 07, 2023
05:12 pm

செய்தி முன்னோட்டம்

உக்ரைன்-ரஷ்யா போர் ஆரம்பித்து ஒரு வருடம் முடிய போகிறது. இருந்தும், இந்த போர் முடிவுக்கு வருவதாகத் தெரியவில்லை. இந்நிலையில், 70 வயதான ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு புற்றுநோய் இருக்கிறது என்று உக்ரைன் ராணுவ உளவுத்துறை தலைவர் கிரிலோ புடானோ தெரிவித்திருக்கிறார். அதிபர் புதினுக்கு புற்றுநோய் மற்றும் பார்கின்சன் நோய் இருப்பதாக பல நாட்களாகவே ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி கொண்டிருக்கிறது. இதற்கிடையில், "புதின் தீவிரமான புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று நாங்கள் நினைக்கிறோம். இந்த தகவல் புதினுக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து எங்களுக்கு கிடைத்தது" என்று உக்ரைன் உளவுத்துறை தலைவர் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். மேலும், அவர் "புதின் விரைவிலேயே இறந்துவிடுவார்" என்றும் கூறி இருக்கிறார்.

ட்விட்டர் அஞ்சல்

உக்ரைன் ராணுவ உளவுத்துறை தலைவர் கிரிலோ புடானோ பேட்டி அளித்த வீடியோ: