
வாக்னர் படைத்தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் மரணம், திட்டமிட்ட கொலை: அமெரிக்கா உளவுத்துறை
செய்தி முன்னோட்டம்
ரஷ்யா அதிபர் விலாடிமிர் புட்டினுக்கு எதிராக சதிப்புரட்சி செய்த வாக்னர் கூலிப்படையின் தலைவரான எவ்ஜெனி பிரிகோஜின், புதன்கிழமை (ஆகஸ்ட் 23) நள்ளிரவு நடந்த விமான விபத்தில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாஸ்கோவில் இருந்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நோக்கி பயணப்பட்ட அந்த விமானத்தில் இருந்த மேலும் 9 பேரும் உயிரிழந்தனர்.
இதுபற்றி விவரித்த அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகளில் ஒருவர், யெவ்ஜெனி ப்ரிகோஜின் குறிவைக்கப்பட்டிருக்கலாம் என்றும், இந்த விமான விபத்து, புட்டினின் சதியாக இருக்கும் எனவும் கூறியுள்ளது, தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மேலும் அந்த அதிகாரி, புடின் தனக்கு எதிரானவர்களை அடக்க, இது போன்ற முயற்சிகளை கையாள்வது புதிதல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
card 2
எதிராளிகளை தீர்த்துக்கட்டும் புடின்
புடினின் தீவிர எதிர்பாளரான நவலனி, விஷம் வைத்து வைத்து கொல்லப்படயிருந்தார்.
அலெக்ஸி நவலனி என்பவர், ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கும் தன்னார்வலராக அறியப்படுபவர். இவர், ஆளும் ரஷ்யா அரசிற்கு எதிராக பலமுறை பிரச்சாரங்களை மேற்கொள்ள, அவர் தீவிர புடின் எதிர்ப்பாளராக அறியப்பட்டார்.
ஒரு முறை, சைபீரியா நகரத்தில் அவர் தங்கி இருந்தபோது, அவர் பருகும் தண்ணீர் பாட்டிலில் கொடிய விஷம் கலக்கப்பட்டு, அவரை கொல்ல திட்டமிடப்பட்டதாக கூறப்படுகிறது.
மரணத்தின் விளிம்பில் இருந்த அவரை, பெர்லின் நகருக்கு அழைத்து சென்று, தீவிர சிகிச்சைக்கு பின்னர் அவர் உயிர் பிழைக்க வைத்தனர் அவரின் ஆதரவாளர்கள்.
இந்த கொலை சாதிக்கு பின்னர் அதிபர் புடின் இருப்பதாக உலக தலைவர்கள் அனைவரும் கருத்து தெரிவித்தனர்.