வளைகுடா போர் பதற்றம்: பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவசர ஆலோசனை
செய்தி முன்னோட்டம்
மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் தொலைபேசி வாயிலாக பேசி, தற்போதைய நிலைமை குறித்து விரிவாக ஆலோசித்தனர். இந்த உரையாடல் குறித்து இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "அதிபர் ட்ரம்ப் பிரதமர் மோடியுடன் உரையாடினார். வளைகுடா நாடுகளின் தற்போதைய சூழல் மற்றும் சர்வதேச எரிசக்தி பாதுகாப்பிற்கு மிக முக்கியமாகக் கருதப்படும் 'ஹார்முஸ் ஜலசந்தி'பகுதியைத் தடையின்றித் திறந்து வைப்பதன் அவசியம் குறித்து இருவரும் விவாதித்தனர்," எனக் குறிப்பிட்டுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
US Ambassador to India Sergio Gor announced about discussions between Trump and Modi https://t.co/QKDKsI9Zia pic.twitter.com/w6GYwTC9Gy
— OSINT Digest (@Indowatchosint) March 24, 2026
பின்னணி
பின்னணி மற்றும் முரண்பாடுகள்
உலகின் பெரும் பகுதி கச்சா எண்ணெய் போக்குவரத்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே நடைபெறுவதால், அதன் முடக்கம் உலகளாவிய எரிசக்தி நெருக்கடியைத் தீவிரப்படுத்தியுள்ளது. முன்னதாக, ஈரானுடன் நடத்திய பேச்சுவார்த்தை "ஆக்கபூர்வமாக" இருந்ததால், அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள் மீதான தாக்குதலை ஐந்து நாட்களுக்கு ஒத்திவைப்பதாக ட்ரம்ப் அறிவித்திருந்தார். ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டால் மட்டுமே இந்தத் தற்காலிகப் போர் நிறுத்தம் நீடிக்கும் என்றும் அவர் நிபந்தனை விதித்திருந்தார். இருப்பினும், அமெரிக்காவின் இந்தக் கருத்தை ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது. ஈரானின் கடுமையான எச்சரிக்கையால்தான் அமெரிக்கா பின்வாங்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வரும் நிலையில், மோடி-ட்ரம்ப் சந்திப்பு சர்வதேச ராஜதந்திர வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.