
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் 88 வயதில் காலமானார்
செய்தி முன்னோட்டம்
இரட்டை நிமோனியாவால் குணமடைந்து வந்த 88 வயதான போப் பிரான்சிஸ் காலமானதாக வாடிகன் திங்களன்று ஒரு காணொளி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
லத்தீன் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த முதல் ரோமன் கத்தோலிக்க திருச்சபைத் தலைவர், தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக வருடாந்திர புனித வெள்ளி ஊர்வலத்தில் கலந்து கொள்ளவில்லை.
பல நாட்களாக சிகிச்சை பெற்று வந்த போப், மருத்துவ அறிவுரைகளை மீறிதான் நேற்று ஈஸ்ட்டரை முன்னிட்டு பொதுமக்கள் முன் தோன்றினார் என்பது குறிப்பிடதக்கது.
செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் 35,000 பேர் கொண்ட கூட்டத்தை அவர் ஆசீர்வதித்து கையசைத்தார்.
ஞாயிற்றுக்கிழமை காலை சிறிது நேரம், அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி.வான்ஸுடன் தனிப்பட்ட சந்திப்பை நிகழ்த்தினார்.
திருச்சபை வரலாற்றில் மிகவும் வயதான போப்களில் ஒருவராக போப் பிரான்சிஸ் இருந்தார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#BREAKING | போப் ஃபிரான்சிஸ் காலமானார்#SunNews | #PopeFrancis | #RIPPopeFrancis pic.twitter.com/i1QeEX8wji
— Sun News (@sunnewstamil) April 21, 2025
தேர்தல் செயல்முறை
போப்பாண்டவர் மாநாடு: புதிய போப்பைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறை
ஒரு போப்பின் மரணம் அல்லது ராஜினாமா உள்ளிட்ட சூழல் ஏற்பட்டால், வாடிகன் ஒரு போப்பாண்டவர் கூட்டத்தை நடத்தும்.
அதில் திருச்சபையின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க கார்டினல்கள் கல்லூரி கூடும்.
ஜனவரி 22, 2025 நிலவரப்படி, 252 கார்டினல்களில் 138 வாக்காளர்கள் உள்ளனர்.
சிஸ்டைன் சேப்பலில் நடைபெறும் இந்த ரகசிய வாக்கெடுப்பில் 80 வயதுக்குட்பட்ட கார்டினல்கள் மட்டுமே வாக்களிக்க முடியும்.
தேர்தலுக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை, பொதுவாக 15-20 நாட்கள் ஆகும்.