Loading...
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வன்முறை: துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் பலி
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வன்முறை

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வன்முறை: துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் பலி

எழுதியவர் Venkatalakshmi V
Jul 28, 2026
07:08 pm

செய்தி முன்னோட்டம்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெற்று வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு இடையே, பொதுமக்கள் நடத்திய பேரணியில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 14 பேர் உயிரிழந்ததாகத் தடைசெய்யப்பட்ட 'ஜாயிண்ட் அவாமி ஆக்ஷன் கமிட்டி' (JAAC) குற்றம் சாட்டியுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 53 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் ஜூலை 27 முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, நியாயமான பிரதிநிதித்துவம் மற்றும் சலுகைகளை ரத்து செய்யக்கோரி JAAC அமைப்பு கடந்த ஜூன் மாதம் முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது.

வன்முறை

ராவலாகோட் பேரணியில் வன்முறை

திங்கள்கிழமை அன்று ராவலாகோட் நகரிலிருந்து முசாபராபாத் நோக்கித் ஆயிரக்கணக்கான மக்கள் பேரணியை மேற்கொண்டனர்.

அப்போது பாதுகாப்புப் படையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 14 பேர் பலியானதாக JAAC தெரிவித்துள்ளது.

அதேவேளையில், இச்சம்பவத்தில் ரேஞ்சர்ஸ் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டதாகவும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வன்முறை குறித்து MEA கண்டனம் தெரிவித்துள்ளது.

"பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடத்தப்படும் இந்த தேர்தல் வெறும் கண் துடைப்பு நாடகம். தனது சட்டவிரோத ஆக்கிரமிப்பையும், அங்கு நடைபெறும் மனித உரிமை மீறல்களையும் மறைக்கவே பாகிஸ்தான் இந்த போலித் தேர்தலை நடத்துகிறது. பல தசாப்தங்களாக பாகிஸ்தான் செய்து வரும் பொருளாதாரச் சுரண்டல் மற்றும் உரிமைகள் பறிப்பால் எழுந்த மக்கள் போராட்டமே இந்த வன்முறைக்குக் காரணம்."

போராட்டம்

போராட்டம் ஏன்?

53 இடங்களைக் கொண்ட சட்டமன்றத்தில், காஷ்மீர் அகதிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 12 இடங்களை ரத்து செய்ய வேண்டும் என்பதே JAAC அமைப்பின் முதன்மை கோரிக்கையாகும்.

இந்த இடங்களில் பெரும்பாலானோர் பாகிஸ்தானின் பிற பகுதிகளில் வசிப்பவர்கள் என்றும், இதனால் உள்ளூர்வாசிகளுக்குச் சரியான அரசியல் பிரதிநிதித்துவம் கிடைப்பதில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இப்பிரச்சனை காரணமாக இம்ரான் கானின் பிடிஐ (PTI) கட்சி இத்தேர்தலைப் புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், அப்பகுதியில் தொடர்ந்து தீவிர அசம்பாவிதங்கள் நிலவி வருவதால் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது.

ADVERTISEMENT