LOADING...
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது வழங்கி கௌரவம்
இந்த விருதை எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது அலி, மோடிக்கு வழங்கினார்

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது வழங்கி கௌரவம்

எழுதியவர் Venkatalakshmi V
Dec 17, 2025
08:55 am

செய்தி முன்னோட்டம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எத்தியோப்பியாவின் உயரிய அரச விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த அங்கீகாரத்தை பெறுவது பெருமைக்குரிய விஷயம் என்று பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 'தி கிரேட் ஹானர் நிஷான் ஆஃப் எத்தியோப்பியா' (The Great Honour Nishan of Ethiopia) என்ற விருதை எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது அலி, மோடிக்கு வழங்கினார். இந்தியா-எத்தியோப்பியா இடையேயான உறவுகளை வலுப்படுத்தியதற்கும், உலகளாவிய ராஜதந்திரியாக அவர் ஆற்றிய தொலைநோக்குத் தலைமைக்கும் அங்கீகாரம் அளிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டது. இந்த விருதை பெறும் முதல் உலகளாவிய நாட்டுத் தலைவர் அல்லது அரசாங்கத் தலைவர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றுள்ளார். இது அவருக்கு வழங்கப்படும் 28-வது உயரிய வெளிநாட்டு அரச விருது ஆகும்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement