இந்தோனேசியாவின் சிவன் கோவிலில் இந்திய தொல்லியல் துறை மூலம் பிரம்மாண்ட புனரமைப்பு பணி தொடங்க ஒப்பந்தம்
செய்தி முன்னோட்டம்
மூன்று நாடுகள் அரசுமுறை பயணமாக இந்தோனேசியா சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள வரலாற்று சிறப்புமிக்க யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமான பிரம்பானன் கோவில் வளாகத்தை பார்வையிட்டு சிறப்புத் தரிசனம் செய்தார். இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோவுடன் இணைந்து, இக்கோவிலை புனரமைப்பதற்கான இந்தியா -இந்தோனேசியா கூட்டு பாதுகாப்புத் திட்டத்தை அவர் முறைப்படி தொடங்கி வைத்தார். 1,000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான இந்த பிரம்பானன் சிவன் கோவில் வளாகத்தைப் பாதுகாத்து வரும் இந்தோனேசிய மக்களுக்கும், அதன் ஆட்சியாளர்களுக்கும் ஒட்டுமொத்த இந்திய மக்களின் சார்பில் பிரதமர் மோடி தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
President Prabowo Subianto and I inaugurated the UNESCO World Heritage Prambanan Temple Compound Restoration and Conservation Project. This initiative is a shining example of the enduring civilisational bonds between India and Indonesia, rooted in a shared heritage that has… pic.twitter.com/Fy8FoBvJ8X
— Narendra Modi (@narendramodi) July 8, 2026
உருக்கம்
"இங்குள்ள காற்றில் இந்திய கலாச்சாரத்தின் வாசம் வீசுகிறது": பிரதமர் மோடி உருக்கம்
கோவில் வளாகத்தில் இந்தோனேசிய அதிபருடன் இணைந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி,"எனது அருமை நண்பர் அதிபர் பிரபோவோவுடன் இந்த இடத்திற்கு வந்திருப்பது எனக்கு மிகவும் நெகிழ்ச்சியளிக்கிறது". "இந்த 1,200 ஆண்டுகாலப் பிரம்மாண்ட பாரம்பரியத்தை இந்தோனேசிய மக்கள் பக்திச் சிரத்தையுடன் பராமரித்து வரும் விதம் போற்றுதலுக்குரியது." மேலும் பேசிய அவர், "இந்தக் கோவிலில் 'மகா மிருத்யுஞ்சய' மந்திரமும், 'ஓம் நமச்சிவாய' முழக்கமும் ஒொலிப்பதைக் கண்டபோது எனது இதயம் நெகிழ்ந்தது. இந்தோனேசியாவின் மிகப்பெரிய இந்த இந்து கோவில் வளாகத்தில் சிவபெருமான், அன்னை துர்கா மற்றும் விநாயகர் சிலைகள் உள்ளன. உலக நன்மைக்காகவும், இந்தியா - இந்தோனேசியா நட்பு பலப்படவும் நான் இங்கு மனமுருகிப் பிரார்த்தனை செய்தேன்" என்று குறிப்பிட்டார்.
புனரமைப்புப் பணிகள்
இந்திய தொல்லியல் துறை (ASI) மூலம் புனரமைப்புப் பணிகள்
பிரம்பானன் கோவில் வளாகத்தை மறுசீரமைப்பு மற்றும் புனரமைக்கும் பணிகளை மேற்கொள்வதற்காக இந்தியா மற்றும் இந்தோனேசியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இத்திட்டத்தில் இந்தியாவின் சார்பில் இந்திய தொல்லியல் துறை முதன்மை முகமையாகச் செயல்பட்டுப் பணிகளை மேற்கொள்ளவுள்ளது. திட்டங்களை மிகவும் துல்லியமாகத் திட்டமிடுவதில் வல்லவரான அதிபர் பிரபோவோ, இப்புனரமைப்புப் பணிகளை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்பே முடிப்பார் என்று தனக்கு நம்பிக்கை உள்ளதாகப் பிரதமர் மோடி தெரிவித்தார். வருகிற 2029-ஆம் ஆண்டுக்குள் இப்பணிகளை முழுமையாக முடிக்க வேண்டும் என்று தான் அதிபரிடம் வாக்குறுதி கேட்டுள்ளதாகவும், பணிகள் முடிந்த பிறகு இதன் விழாக் கொண்டாட்டத்தில் பங்கேற்கத் தான் மீண்டும் இந்தோனேசியா வருவேன் என்றும் பிரதமர் மோடி உறுதியளித்தார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
The magnificent Prambanan Temple stands as a timeless symbol of our cultural and spiritual links. Preserving such heritage is about safeguarding the traditions that continue to inspire generations.
— Narendra Modi (@narendramodi) July 8, 2026
India is privileged to partner with Indonesia in this important endeavour. As… pic.twitter.com/m6MCfWKh8n