தொடர்ந்து மூன்றாவது நாளாக தங்கத்தின் விலையில் வீழ்ச்சி; இன்றைய சவரன் விலை இதுதான்
செய்தி முன்னோட்டம்
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், தொடர்ந்து மூன்றாவது நாளாக தங்கத்தின் விலை குறைந்துள்ளது. அதன்படி, புதன்கிழமை (ஜூலை 8), சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹70 குறைந்து ₹13,330 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹560 குறைந்து ₹1,06,640 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹76 குறைந்து ₹14,542 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹608 குறைந்து ₹1,16,336 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலையில் வீழ்ச்சி
18 காரட் தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹50 குறைந்து ₹11,150 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 18 கேரட் தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹400 குறைந்து ₹89,200 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதற்கிடையே புதன்கிழமை வெள்ளி விலையும் சரிந்துள்ளது. வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹5 குறைந்து ₹245 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது, ஒரு கிலோ வெள்ளி ₹245000 ஆக விற்கப்படுகிறது.