LOADING...
இந்தியா - நியூசிலாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஒரு வரலாற்று மைல்கல்: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
இந்தியா - நியூசிலாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஒரு வரலாற்று மைல்கல் என பிரதமர் மோடி பெருமிதம்

இந்தியா - நியூசிலாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஒரு வரலாற்று மைல்கல்: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

எழுதியவர் Sekar Chinnappan
Jul 11, 2026
06:56 am

செய்தி முன்னோட்டம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பசிபிக் பிராந்திய நாடான நியூசிலாந்திற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க அதிகாரப்பூர்வ அரசுமுறை பயணத்தை மேற்கொண்டுள்ளார். கடந்த 40 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் நியூசிலாந்து நாட்டிற்குப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும். அந்நாட்டு பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸனின் அதிகாரப்பூர்வ அழைப்பின் பேரில் ஆக்லாந்து நகரை சென்றடைந்த பிரதமர் மோடிக்கு, விமான நிலையத்திலேயே நேரில் வந்து கட்டிப்பிடித்து மிக உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

வர்த்தக ஒப்பந்தம்

வரலாற்று மைல்கல்லாக மாறிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்

இருநாட்டுத் தலைவர்களும் பங்கேற்ற உயர்மட்டப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இந்தியா - நியூசிலாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக எட்டப்பட்டது. மிகக் குறுகிய காலத்திற்குள் இந்த வர்த்தக ஒப்பந்தத்தை வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டு வந்ததற்காக நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸனுக்கு பிரதமர் மோடி தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். இந்த ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய வேகத்தையும் உத்வேகத்தையும் அளிக்கும் ஒரு வரலாற்று மைல்கல் என்றும் அவர் புகழ்ந்தார்.

இருதரப்பு உறவுகள்

வியூகக் கூட்டாண்மையாக உயர்ந்த இருதரப்பு உறவுகள்

இந்த வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பின் போது, இருநாடுகளும் தங்களது உறவை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் வியூகக் கூட்டாண்மை (Strategic Partnership) என்ற புதிய கட்டத்திற்குள் இணைந்துள்ளன. ஜனநாயக விழுமியங்கள் மீது கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கை, இந்தியாவையும் நியூசிலாந்தையும் இயற்கையான கூட்டாளிகளாக மாற்றியுள்ளது என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, இரு கடல்சார் நாடுகளின் இந்த நெருக்கமான ஒத்துழைப்பு இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் உலகளாவிய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு வலு சேர்க்கும் என்றும் உறுதியளித்தார்.

Advertisement

இந்திய வம்சாவளியினர்

வர்த்தகத்தைத் தாண்டிய நட்பு மற்றும் இந்திய வம்சாவளி சந்திப்பு

நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் பேசுகையில், இருநாடுகளின் வர்த்தக நிகழ்ச்சி நிரலில் மிகக் குறுகிய காலத்தில் பிரம்மாண்டமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை வரவேற்றார். இந்த வர்த்தக ஒப்பந்தத்தைத் தாண்டி, இருநாட்டு உறவுகளை மேலும் விரிவுபடுத்துவதே தற்போதைய நோக்கம் என்றார். இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடி நியூசிலாந்தின் முன்னணி வர்த்தக மற்றும் விளையாட்டுப் பிரபலங்களை சந்திக்கவுள்ளதுடன், ஆக்லாந்தில் கூடும் பிரமாண்டமான இந்திய வம்சாவளி மக்கள் மத்தியிலும் உரையாற்ற உள்ளார்.

Advertisement